புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் அஜித் ரசிகர்கள் – கொடி அறிமுகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை என்ற ஊரில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். மேலும் கட்சிக்கான புதிய கொடியையும் அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். நிகழ்வில் பேசிய நிர்வாகி தமிழகத்தை ஆளக்கூடிய ஒரே தகுதி அஜித்குமாருக்கு உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை, செப்டம்பர் 20 : கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை என்ற ஊரில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். மேலும் கட்சிக்கான புதிய கொடியையும் அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். நிகழ்வில் பேசிய நிர்வாகி தமிழகத்தை ஆளக்கூடிய ஒரே தகுதி அஜித்குமாருக்கு உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழம் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சியமைத்த நிலையில், தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பான பேச்சு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக நடிகர் தனுஷின் பிறந்த நாள் நிகழ்வில் அவரது பேச்சும், ரசிகர் மன்றத்தினரின் செயல்பாடுகளும் அவர் அரசியல் வருகையை மறைமுகமாக உணர்த்துவது போல அமைந்தது. அது போல நடிகர் ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரசிகர் மன்ற நிகழ்வில் பேசிய நிர்வாகி ஒருவர் ரவி மோகன் அரசியலுக்கு வருவது போல பேசியதும் சர்ச்சையானது.
இதையும் படிக்க : நானியின் தி பாரடைஸ் படத்தை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம்




புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் அஜித் ரசிகர்கள்
இந்த நிலையில் தமிழ் திரையுலகில் விஜய்க்கு போட்டியாக அறியப்பட்டவர் நடிகர் அஜித்குமார். இருவரது படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸானால் தமிழகமே களேபரமாக காட்சியளிக்கும். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடிகர் அஜித் குமார் ரசிகர்கள் இணணைந்து தமிழக மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். மேலும் கட்சிக்கான புதிய கொடியையும் அறிமுகம் செய்துள்ளனர்.
கட்சிக் கொடியானது மஞ்சள் வெள்ளி சிவப்பு நிறத்தில் அமைந்துள்ளது. கொடியில் இரண்டு புறமும் சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளன. இது அப்படியே தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நினைவு படுத்துவதாக உள்ளது. அஜித் வருகைக்காக மாநில பொதுச்செயலாளர் பதவியை காலியாக வைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
நிகழ்வில் பேசிய கட்சி நிர்வாகிகள், அஜித்குமார் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை ாங்கள் விரும்புகிறோம் என்றார். அதற்காக மாநில பொதுச்செயலாளர் என்ற இடத்தை அவருக்காக காலியாக வைத்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 5 லட்சம் மக்கள் இணைந்து இந்த கட்சியைத் தொடங்கியிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : டாஸ்கில் மோதிக்கொண்ட ஷமா – ஜேசன்… இவ்வளவு கோபம் எதற்கு? கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி
முன்னதாக லண்டனில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்ட நிலையில் அதனை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். போட்டிக்கு முன்னதாக அஜித் விஜய்யும் சந்தித்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. நிகழ்வில் இருவரும் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.