AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

MIS திட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கலாமா?.. விதிகள் கூறுவது என்ன?

Post Office Monthly Income Scheme Benefits | அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், அஞ்சலக மாதந்திர வருமான திட்டத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

MIS திட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கலாமா?.. விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Sep 2026 15:11 PM IST

மனிதர்களுக்கு பொருளாதார தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். உடல்நல சிக்கல், இழப்பு, இயற்கை பேரிடர் என எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராமல் நிதி தேவை இருந்துக்கொண்டே தான் இருக்கும். இதன் காரணமாக தான், ஒவ்வொருவரும் பொருளாதார பாதுகாப்பை பெற வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. இதற்காக சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் மாதாந்திர வருமான திட்டத்தில் ஒருவர் எத்தனை கணக்குகளை வைத்திருக்கலாம், ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்

அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களின் ஒன்றுதான் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் (MIS – Monthly Income Scheme). இந்த திட்டத்தில் மொத்தமாக பணத்தை முதலீடு செய்து, பிறகு குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் வருமானம் போல பெற்றுக்கொள்ளலாம். இதன் காரணமாக தான் இந்த திட்டத்திற்கு மாதாந்திர வருமான திட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரயில்களில் இலவச தண்ணீர் பாட்டில் கிடைக்குமா? உண்மை என்ன?

ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கலாமா?

மாதாந்திர வருமான திட்டத்தில் சிறந்த வருமானம் கிடைப்பதன் காரணமாக, பலரும் அதில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில், இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் ஒருவர் ஒரு கணக்கு மட்டும் தான் தொடங்க முடியுமா என்ற குழப்பம் உள்ளது. இதற்கு பதில் ஆமாம் என்பது தான். அதாவது, ஒருவர் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்கி முதலீடு செய்யலாம்.

இதையும் படிங்க : வீடு காலி செய்யும்போது முழு டெபாசிட் பணமும் வேண்டுமா?.. அப்போ இத பண்ணுங்க!

வரம்புக்குள் முதலீடு செய்ய வேண்டும்

எம்ஐஎஸ் திட்டத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டாலும், அந்த திட்டத்தில் முதலீடு செய்ய வரம்பு உள்ளது. அந்த வரம்புக்குள் முதலீடு செய்ய வேண்டும்  என்பது கட்டாயமாக உள்ளது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், முதலீடு செய்து மாத வருமானம் பெற வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us