AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாடிக்கையாளர்கள் மீது மறைமுக MDR கட்டணம்?.. தீவிர நடவடிக்கை எடுக்க அரசு முடிவு!

Action For Indirect MDR On Consumers | இந்தியாவில் அக்டோபர் 15, 2026 முதல் எம்டிஆர் கட்டணம் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் மீது மறைமுக எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படுமா என்ற கவலை குறித்து அரசு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மீது மறைமுக MDR கட்டணம்?.. தீவிர நடவடிக்கை எடுக்க அரசு முடிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Sep 2026 13:49 PM IST

இந்தியாவில் அக்டோபர் 15, 2026 முதல் எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணம் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முழுவதும் வணிகர்களுக்கானது என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு மறைமுக கட்டணம் விதிக்கப்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தான், வாடிக்கையாளர்கள் மீது மறைமுக கட்டணங்கள் விதிக்கப்படாத வகையில் கூர்ந்து கவனிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், எம்டிஆர் கட்டணம் குறித்து வெளியான முக்கிய தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் எம்டிஆர் கட்டணம்

இந்திய பொதுமக்கள் மத்தியில் யுபிஐ (UPI – Unified Payment Interface) பயன்பாடு பரவலாக உள்ளது. சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை எங்கு பொருட்களை வாங்கினாலும், பொதுமக்கள் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றனர். இத்தகைய முக்கிய அம்சமாக யுபிஐ உள்ள நிலையில், அக்டோபர் 15, 2026 முதல், யுபிஐ பண பரிவர்த்தனைக்கு எம்டிஆர் கட்டணம் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை. வணிக நிறுவனங்கள் தான் ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க : பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரியை குறைத்த மத்திய அரசு.. விலையில் மாற்றம் ஏற்படுமா?

கூர்ந்து கவனிக்க நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு

இந்த கட்டணம் முழுவதும் நிறுவனங்களுக்கானது என்றும், வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் பெறப்படாது என்று அரசு கூறியிருந்தது. இருப்பினும், இந்த எம்டிஆர் கட்டணத்தை வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமாக பெற வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான், வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமாக எம்டிஆர் கட்டணம் வசூல் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா?.. இந்த சிம்பிள் ஃபார்முலா போதும்!

மறைமுகமாக எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படும் என பொதுமக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us