20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா?.. இந்த சிம்பிள் ஃபார்முலா போதும்!
50 30 20 Rule To Become Billionaire | கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். இந்த நிலையில், வெறும் 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகில் வாழும் பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய ஆசைகளில் ஒன்றுதான், எப்படியாவது கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என்பது. நடுத்தர வாழ்க்கையில் இருக்கும் நிதி சிக்கல்களை நீக்கி, எந்தவித பண சிக்கலும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என பலரும் நினைப்பர். ஆனால், காலம் முழுவதும் தேவைக்காக உழைத்து, பணக்கார வாழ்க்கையை வாழ முடியாமலெ பெரும்பாலனவர்களின் வாழ்க்கை முடிந்துவிடும். ஆனால், அது உண்மை அல்ல. திட்டமிட்டு செயல்படும் பட்சத்தில் குறுகிய காலத்திலே ஒருவரால் கோடீஸ்வரர் ஆக முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
20 ஆண்டுகளில் ஒருவர் கோடீஸ்வரர் ஆவது எப்படி?
ஒருவர் திட்டமிட்டு செயல்படும் பட்சத்தில் அவரால் வெறும் 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக முடியும் என கூறப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 7 சதவீத சம்பள உயர்வு, 20 ஆண்டு கால அவகாசம் என முறையாக திட்டமிடும் பட்சத்தில் ஒருவரால் மிக சுலபமாக கோடீஸ்வரராக முடியும்.
இதையும் படிங்க : MDR கட்டணம் அமலுக்கு வந்தாலும் UPI-ல் இவை எல்லாம் இலவசம் தான்!
20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம் – சிம்பிள் ஃபார்முலா
இன்று உங்களுக்கு வயது 30, நீங்கள் மாதம் ரூ.35,000 சம்பளம் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதனை உங்கள் ஆண்டு சம்பள உயர்வுடன் ஒப்பிட்டு இந்த கணக்கை பாருங்கள்.
- 35 வயதில் மாதம் ரூ.49,000 சம்பளம் கிடைக்கும்
- 40 வயதில் மாதம் ரூ.68,000 சம்பளம் கிடைக்கும்
- 50 வயதில் மாதம் ரூ.1,35,000 சம்பளம் கிடைக்கும்
மேலே குறிப்பிட்டுள்ள கணக்குப்படி, 20 ஆண்டுகளில் உங்கள் கைக்கு வரும் வருமானம் நல்ல உயர்வை சந்திக்கும். இந்த நிலையில் தான், நீங்கள் 50-30-20 விதியை பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம்.. மத்திய அரசு அறிவிப்பு!
50-30-20 விதி கூறுவது என்ன?
நீங்கள் வாங்கும் ரூ.35,000 சம்பளத்தை இப்படி செலவு செய்ய தொடங்க வேண்டும்.
50 சதவீதம் – ரூ.17,500-ஐ நீங்கள் உங்கள் குடும்ப செலவுக்காக பயன்படுத்த வேண்டும்.
30 சதவீதம் – ரூ.10,500-ஐ நீங்கள் எதிர்கால முதலீடாக எஸ்ஐபி, பிபிஎஃப், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
20 சதவீதம் – ரூ.7,000-ஐ கடன் தவணை மற்றும் இதர செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.