EPFO : மாதம் மாதம் கணக்கில் பிஎஃப் பணம் முறையாக வரவு வைக்கப்படுகிறதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?
How To Check PF Money | இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அவர்களது பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் பிஎஃப் பணம் வரவு வைக்கப்படும். அந்த பணம் முறையாக வரவு வைக்கப்படுகிறதா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என பார்க்கலாம்.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் எதிர்கால தேவைகளுக்காக மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பிஎஃப் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும். ஒருவேளை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பிஎஃப் பணத்தை முறையாக வழங்கவில்லை என்றால் அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் ஊழியர்களுக்கு உரிமை உண்டு.
இந்த நிலையில், உங்கள் நிறுவனம் உங்களுக்கு பிஎஃப் பணத்தை முறையாக வழங்குகிறதா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
15 நாட்களுக்குள் ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட வேண்டும்
ஒவ்வொரு ஊழியரும் வங்கி கணக்கிற்கு சம்பளத்தை பெறுவதற்கு முன்னதாகவே, அவரின் பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்படும். ஊழியர் சார்பில் குறிப்பிட்ட தொகை, நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகை என ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள்ளதாக இந்த பணம் வரவு வைக்கப்பட வேண்டும். அவ்வாறு, தங்களுக்கு மாதம் மாதம் முறையாக பிஎஃப் பணம் வரவு வைக்கப்படுகிறதா என்பதை ஊழியர்கள், இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.




இதையும் படிங்க : Silver : மீண்டும் உச்சத்தை தொட தயாராகி வரும் வெள்ளி.. இவர் என்ன சொல்லுறாரு பாருங்க!
பிஎஃப் தொகையை சரிப்பார்ப்பது எப்படி?
- அதற்கு முதலில் ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கு செல்லுங்கள்.
- அதில் உங்களது யுஏஎன் விவரங்களை பயன்படுத்தி உள்ளே நுழையுங்கள்.
- பின்னர் மெம்பர் பாஸ்புக் சர்வீஸ் (Member Passbook Service) என்பதை தேர்வு செய்யுங்கள்.
- அதில் உங்களது மெம்பர் ஐடியை (Member ID) பதிவிட்டு, உங்களுக்கான பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : Content Creation மூலம் ரூ.1.6 கோடி சம்பாதித்த இளைஞர்.. ஆன்லைன் மூலம் அசத்தி காட்டியது எப்படி?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி மிக சுலபமாக உங்களது பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறதா என்பதை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.