AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி EPFO குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்.. வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்!

Employee Provident Fund Organization WhatsApp Channel | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய வாட்ஸ்அப் சேனல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த வாட்ஸ்அப் சேனலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, அதில் இணைவது எப்படி என பார்க்கலாம்.

இனி EPFO குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்.. வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Sep 2026 16:39 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமன்றி, ஊழியர்களுக்கு தேவையான மற்றும் அவர்கள் எளிதாக சேவைகளை பெறும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், இபிஎஃப்ஓ அமைப்பு புதியதாக வாட்ஸ்அப் சேனல் (WhatsApp Channel) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் முக்கிய தகவல்கள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.

வாட்ஸ்அப் சேனலை அறிமுகம் செய்த இபிஎஃப்ஓ

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முக்கிய தகவல்களை இணையதளத்தின் மூலம் வெளியிடும். ஆனால், ஒவ்வொரு முறையும் இணையதளத்திற்கு சென்று தகவல்களை தெரிந்துக்கொள்ள சற்று சிரமமாக இருக்கும் என்பதால், பயனர்கள் எளிதில் தகவல்களை தெரிந்துக்கொள்ளும் வகையிக் இபிஎஃப்ஓ அமைப்பு வாட்ஸ்அப் சேனலை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : இனி காய்கறி வாங்குவதை கூட ஏஐ பார்த்துக்கொள்ளும்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்.. NPCI புதிய நடவடிக்கை!

இபிஎஃப்ஓ தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ள லிங்குகளை கிளிக் செய்து இந்த சேனல்களில் இணைந்துக்கொள்ளலாம். இல்லையென்றால், இபிஎஃப்ஓ வழங்கியுள்ள கியூஆர் கோடு மூலமாகவும் பயனர்கள் இந்த வாட்ஸ்அப் சேனலில் இணைந்துக்கொள்ளலாம். இபிஎஃப்ஓ தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவுப்புகளை பயனர்கள் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேனலில் இணைவது எப்படி?

இபிஎஃப்ஓ தனது எக்ஸ் பதிவில் வாட்ஸஅப் சேனல் லிங்கை பகிர்ந்துள்ளது. அதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் சேனலில் இணைந்து அதன் மூலம் முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு லிங்கை கிளிக் செய்து, வாட்ஸ்அப் சேனலில் இணையும் பயனர்கள் அதிகாரப்பூர்வ லிங்குகளை உறுதி செய்த பிற்கு மட்டுமே அவற்றை கிளிக் செய்து சேனலில் இணைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us