AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி காய்கறி வாங்குவதை கூட ஏஐ பார்த்துக்கொள்ளும்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்.. NPCI புதிய நடவடிக்கை!

Artificial Intelligence Will Buy Vegetables | தற்போதைய சூழலில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இனி காய்கறிகள் வாங்குவதை கூட செயற்கை நுண்ணறிவு அம்சம் பார்த்துக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி காய்கறி வாங்குவதை கூட ஏஐ பார்த்துக்கொள்ளும்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்.. NPCI புதிய நடவடிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Sep 2026 15:13 PM IST

நாள்தோறும் வேலைக்கு செல்லும் நபர்களின் மிகப்பெரிய ஆசையாக இருப்பது, தனக்கு தேவையானவற்றை செய்துகொடுக்க யாரேனும் ஒருவர் செய்துகொடுத்தால் எப்படி இருக்கும் என்பதுதான். வசதி உள்ளவர்கள் தங்களுக்கான வேலைகளை செய்ய ஆட்களை பணியில் வைத்துக்கொள்வர். ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு அது வெறும் ஆசையாம மட்டுமே இருக்கும். இந்த நிலையில் தான், மனிதர்களின் வேலைகள் அனைத்தையும் இனி செயற்கை நுண்ணறிவு அம்சமே செய்யும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

அந்த வகையில் தான், இனி வரும் நாட்களில் மனிதர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சமே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு கட்டளை போது – உடனே செயலாற்றும் ஏஐ

காய்கறிகள் நிரந்தர விலை கொண்டவை அள்ள. அவற்றின் விலை காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கும். இந்த நிலையில் தான்,  காய்கறிகள் விலை குறைவாக இருக்கும் போது, எனக்கு காய்கறிகளை வாங்கித் தர வேண்டும் என செயற்கை நுண்ணறிவு அம்சத்திடம் கூறினால் அதுவே உங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொடுத்துவிடும். இனி வரும் காலக்கட்டத்தில் இது தான் நடக்கப்போகிறது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2030 முடிவதற்குள் ஏஐ மனிதர்களையே அழித்துவிடுமா? ஆன்த்ரோபிக் ஆய்வாளர் எச்சரிக்கை

என்சிபிஐ எடுத்துள்ள முக்கிய முயற்சி

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI – National Payment Corporation Of India), யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி, இந்த அம்சத்தை கொண்டு வருவதற்காக உள்கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த முறை அமலுக்கு வரும் பட்சத்தில், பணம் செலுத்துவதற்கு பயனர்களின் ஒப்புதல் தேவையில்லை. ஏஐ ஏஜெண்டுகளே அனைத்து வேலைகளை செய்து பண பரிவர்த்தனை செய்துக்கொள்ளும்.

இதையும் படிங்க : கார்களின் விலையை மீண்டும் உயர்த்திய மாருதி சுசூகி – எந்தெந்த மாடல்களின் விலை உயர்கிறது?

தற்போது யுபிஐ மூலம் பணம் அனுப்புவதற்கு பின் எண்ணை உள்ளிட்ட வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், இந்த ஏஐ முறையில் அப்படி இருக்காது. பயனர்கள் எவ்வளவு பணம் மேற்கொள்ள வேண்டும் என கூறினால் போதும், ஏஐ மற்ற வேலைகளை செய்துக்கொள்ளும்.

Follow Us