AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதியவர்களை குறி வைக்கும் Deep Fake Voice மோசடி.. பெற்றோர்களை பாதுகாப்பது எப்படி?

Deep Fake Voice Scam Targeting Elderly People | செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், அதில் பல சிக்கல்களும் உள்ளன. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் Deep Fake Scam குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

முதியவர்களை குறி வைக்கும் Deep Fake Voice மோசடி.. பெற்றோர்களை பாதுகாப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Sep 2026 13:58 PM IST

செயற்கை நுண்ணறிவு அம்சம் (Artificial Intelligence) அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. எது உண்மை, எது பொய் என வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் வேலைகள் மிகவும் தத்ரூபமாக உள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் வாய்ஸ் (Deep Fake Voice) மூலம் மோசடிகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், இத்தகைய மோசடிகளில் இருந்து வயதானவர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அச்சு அசல் உண்மையை போலவே இருக்கும் டீப் ஃபேக் ஆடியோ

இந்த டீப் ஃபேக் ஆடியோ அம்சத்தின் மூலம் ஒருவரின் குரலை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், போன் கால் அழைப்பு, யூடியூப் வீடியோ ஏதேனும் ஒன்றில் ஒரு மூன்று வினாடிகளுக்கான சாம்பிள் ஆடியோ கிடைத்தால் போதும். அதன் மூலம் அதே குரலை உருவாக்க முடியும். இது ஒரு சிற்ந்த அம்சமாக இருந்தாலும், இதன் மூலம் ஏராளமான மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதையும் படிங்க : FASTag-ல் கிடைக்கும் ரூ.1,000 இலவச ரீச்சார்ஜ்.. அட இது உங்களுக்கு தெரியாதா?.. உடனே பரிசை வெள்ளுங்கள்!

அதின் ஒன்றுதான் மூத்த குடிமக்களை குறி வைக்கும் டீப் ஃபேக் குரல் மோசடி. அதாவது, முதியவர்களை அழைத்து அவர்களது பிள்ளைகளின் குரலில் பேசுவர். அதனை உண்மையாகவே தனது பிள்ளை என முதியவர்களும் நம்பிவிடுவர். இதனை ஆயுதமாக பயன்படுத்தும் மோசடிக்காரர்கள், முதியவர்களிடம் இருந்து பணம் பரிப்பர். இவ்வாறு ஏராளமான முதியவர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

குடும்பத்திற்கான “Code Word” வைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு முன்னதாக ஏதேனும் Code Word பயன்படுத்த தொடங்குங்கள். இந்த வார்த்தையை பயன்படுத்தினால் மட்டும் தான் நீங்கள் பேசுகிறீர்கள் என உங்களது குடும்பத்தினர் உறுதி செய்யும் வகையில் ஏதேனு ஒரு வார்த்தை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

குரல் பதிவுகளை தவிருங்கள்

சமூக ஊடகங்களில் உங்களது குரலை பதிவிடுவதை தவிருங்கள். அதன் மூலம் தான் இத்தகைய மோசடிகள் நடைபெறும் என்பதால், உங்களது குரல் இல்லாத பதிவுகளை பதிவு செய்யுங்கள்.

இரண்டு போன் கால்கள் செய்ய சொல்லுங்கள்

உங்களது பெற்றோருக்கு இத்தகைய அழைப்பு எதுவும் வந்தால், உடனடியாக பணம் அனுப்பாமல் மீண்டும் ஒருமுறை கால் செய்ய சொல்லுங்கள். அதாவது, தெரியாத எண்ணில் இருந்து கால் வந்த பிறகு, பிள்ளைகளின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு கால் செய்ய வேண்டும். அப்போது அவர்கள் நிதானமாக பேசினால் அது மோசடி என தெரிந்துக்கொள்ளலாம்.

Follow Us