பட்ஜெட் விலையில் அறிமுகமானது போக்கோ எக்ஸ்8 சீரீஸ்.. முழு விவரம் இதோ!
Poco Introduced X8 Series In Budget Range | போக்கோ நிறுவனம் கடந்த மாதம் தனது எம்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது எக்ஸ்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிறுவனமாக போக்கோ (Poco) உள்ளது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனை ஏராளமான இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். போக்கோ நிறுவனம் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது தனது போக்கோ எக்ஸ்8 மற்றும் எக்ஸ்8 பவர் (Poco X8 and Poco X8 Power) ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் பெரிய பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போக்கோ எக்ஸ்8 மற்றும் எக்ஸ்8 பவர் ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.




போக்கோ எக்ஸ்8 மற்றும் எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போன்கள்
போக்கோ நிறுவனம் இந்தியாவில் தனது போக்கோ எக்ஸ்8 மற்றும் போக்கோ எக்ஸ்8 பவர் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மாதம் எம்8 சீரீஸில் ஸ்மார்ட்போன்களை (Poco M8 Series Smartphone) அறிமுகம் செய்த நிலையில், தற்போது எக்ஸ்8 சீரீஸில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.83 இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் 3,500 நிட்ஸ் வரை பீக் பிரைட்னஸ் அம்சமும் உள்ளது.
இதையும் படிங்க : ஒரே மாதத்தில் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் – என்ன காரணம்?
போக்கோ எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் – விலை மற்றும் இதர அம்சங்கள்
9,000mAh. 67W. Snapdragon. IP69K.
And all of that for just ₹26,999. 🔥Big battery. Big performance. Built tough.
The POCO X8 doesn’t just bring power.
It brings MAXX power. Sale starts 11th Sept.#POCO #POCOX8 #POCOIndia #PowerMaxxing pic.twitter.com/CKbLnFdosU
— POCO India (@IndiaPOCO) September 4, 2026
போக்கோ எக்ஸ்8 ஸ்மார்ட்போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென்4 சிப் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. போகோ எக்ஸ்8 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.29,999 ஆக உள்ள நிலையில், போக்கோ எக்ஸ்8 பவர் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.35,999 ஆக உள்ளது.