வாட்ஸ்அப்பில் வந்த “Bill Payment” அம்சம்.. இனி எல்லாமே சுலபம் தான்!
Bill Payments Option Introduced In WhatsApp | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பில் பேமெண்ட்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெட்டா (Meta) நிறுவனம் பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், அட்டகாசமான அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பேமெண்ட் மேற்கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pay) உள்ளிட்ட யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளில் மேற்கொள்வதை போல, வாட்ஸ்அப் மூலமும் கட்டணம் செலுத்தலாம். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் வந்த Bill Payments அம்சத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் வந்த பில் பேமெண்ட் அம்சம்
இந்தியாவில் உள்ள பில் கட்டண கட்டமைப்புடன் இணைந்து, வாட்ஸ்அப் இந்த கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 30 பிரிவுகளின் கீழ் சுமார் 22,722 நிறுவனங்கள் வாட்ஸ்அப் செயலியில் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. எனவே சமையல் எரிவயு கேஸ் சிலிண்டர் கட்டணம், குடிநீர் வரி, ஃபாஸ்டேக் கட்டணம், இன்சூரன்ஸ் ப்ரீமியம், கிரெடிட் கார்டு பில் மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
இதையும் படிங்க : விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஒரே செயலியில் பல சேவைகள்
முன்பெல்லாம் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தினால் தான் முடியும். ஆனால், தற்போது வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. வாட்ஸ்அப்பில் இருந்தே மிக சுலபமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். பண பரிவர்த்தனை மட்டுமன்றி டிவி ரீச்சார்ஜ் கட்டணம் செலுத்த வேண்டும், போன் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் உள்ளிட்ட தகவல்களை காட்டும்.
இதையும் படிங்க : யுபிஐ பண பரிவர்த்தனை செய்யும்போது இவை குறித்து கவனம் தேவை.. ஆர்பிஐ கூறும் முக்கிய அறிவுரை!