விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Apple iPhone 18 Pro Introducing In India | ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 18ப்ரோ ஸ்மார்ட்போனை செப்டம்பர் 09, 2026 அன்று அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் கடந்த ஆண்டு அறிமுகமான மாடலான ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் (Apple iPhone 17 Series), பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தனது அடுத்த மாடலான ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸை (Apple iPhone 18 Series) அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் தயாராகி வருகிறது. செப்டம்பர் 09, 2026 அன்று ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோவை (Apple iPhone 18 Pro) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செப்டம்பர் 9-ல் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 18 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் புதிய ஏ20 சிப், பெரிய பேட்டரி உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் தனது முதல் மடிக்க கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் வருகிறது 3 முக்கிய பாதுகாப்பு அப்டேட்கள் !




ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ப்ளூம்பர்க்ஸ் அறிக்கையின்படி, ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் 1,199 டாலர்களுக்கு அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ 1,099 டாலர்களுக்கு அறிமுகமானது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோவை விட ரூ.10,000 அதிகமாக விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கல்லூரி மாணவர்களுக்கு ஜாக் பாட்.. கூகுள் அறிவித்த இலவச AI Plus திட்டம்.. முழு விவரம் இதோ!
இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகமாகும்?
ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,39,900-க்கு அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,34,900-க்கு அறிமுகமானது. இந்த நிலையில், ஐபோன் 18 ப்ரோ ரூ.3,5,000 அதிகமாக அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல, ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,59,900-க்கு அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.