AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீண்டும் விலையை உயர்த்த தயாராகும் ஆப்பிள்.. ஆப்பிள் பிரியர்களுக்கு ஷாக் தகவல்!

Apple Planning To Hike Price Of Smartphones | ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபேட்கள் மற்றும் மேக் புக்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் விலையை உயர்த்த தயாராகும் ஆப்பிள்.. ஆப்பிள் பிரியர்களுக்கு ஷாக் தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Aug 2026 00:45 AM IST

இந்தியாவில் சமீப காலமாக ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. இந்த நிலையில், ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டு வருவதாக ப்ளூம்பர்க் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆப்பிள் நிறுவனம் எப்போது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்த உள்ளது என்பது குறித்த குறிப்பிட்ட தேதி எதுவும் குறிப்பிடப்பவில்லை. ஆனால், நிச்சயம் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்த உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் விலையை உயர்த்த தயாராகி வரும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தனது சில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில் தான், ஆப்பிள் நிறுவனம் மீண்டும் விலை உயர்வை மேற்கொள்ள உள்ளது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபேட்கள் (iPad) மற்றும் மேக் புக்களின் (Mac Book) விலைகளை அதிரடியாக உயர்த்தியது. இந்த நிலையில், தற்போது ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஏர்டெல் vs ஜியோ – அன்லிமிட்டட் 5 ஜி டேட்டா பிளான் – எதில் விலை குறைவு?

கூகுள், சாம்சங் நிறுவனங்களை உற்று நோக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்துவதற்கு முன்னதாக சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் (Google) நிறுவனங்களை உற்று நோக்கி வருகிறது. காரணம், இந்த நிறுவனங்கள் சமீபத்தில் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை 100 டாலர்களை வரை உயர்த்தியுள்ளது. இதே நிலைப்பாட்டை ஆப்பிள் நிறுவனமும் கையில் எடுக்கும் பட்சத்தில் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ (Apple iPhone 18 Pro) 1,199 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் முக்கிய ஏஐ அம்சங்கள் – இது தெரியுமா உங்களுக்கு?

Follow Us