AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாட்ஸ்அப்பில் முக்கிய ஏஐ அம்சங்கள் – இது தெரியுமா உங்களுக்கு?

WhatsApp AI Features : வாட்ஸ்அப்பின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மெட்டா பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ என்ற அம்சம் மூலம் புகைப்படங்களை உருவாக்குவது, புகைப்படங்களை எடிட் செய்வது போன்ற பல்வேறு பணிகளுக்கு உதவுகிறது.

வாட்ஸ்அப்பில் முக்கிய ஏஐ அம்சங்கள் – இது தெரியுமா உங்களுக்கு?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Aug 2026 19:15 PM IST

வாட்ஸ்அப் தற்போது வெறும் மெசேஜிங் செயலியாக மட்டுமில்லாமல் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள சூப்பர் ஆப்பாக செயல்படுகிரது. குறிப்பாக வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. அதன் ஒரு பகுதியாக மெட்டா ஏஐ உதவியுடன் வாட்ஸ்அப்பில் படங்களை உருவாக்குவது முதல் நீண்ட மெசேஜ்களை சுருக்குவது வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த கட்டுரையில் வாட்ஸ்அப்பில் 5 ஏஐ அம்சங்களை பாரக்கலாம்.

வாட்ஸ்அப்பில் தற்போது பயன்படுத்தக்கூடிய 5 ஏஐ அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

1. மெட்டா ஏஐ மூலம் படங்களை உருவாக்கலாம்

சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போன்ற ஏஐ கருவிகளைப் போல வாட்ஸ்அப்பிலும் மெட்டா ஏஐ உதவியுடன் படங்களை உருவாக்க முடியும். நம் தெளிவான பிராம்ப்ட் கொடுத்து அதன் மூலம் படங்களை உருவாக்க முடியும். உங்கள் மனதில் உள்ள காட்சிகளை வார்த்தைகளாக விவரித்தால் மெட்டா ஏஐ மூலம் படங்களை உருவாக்க முடியும். அது மட்டும்லலாமல் நம் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதையும் படிக்க : இதை கவனிச்சீங்களா? சிந்து அணிந்திருக்கும் சிறிய கருவி.. ஏன் தெரியுமா?

2. வாட்ஸ்அப் சாட்களில் ஏஐ

தனிப்பட்ட சாட்களில் மட்டுமல்லாமல் குரூப் சாட்களிலும் மெட்டா ஏஐயை பயன்படுத்த முடியும். சாட் செய்து கொண்டிருக்கும்போதே மெட்டா ஏஐயை குறிப்பிட்டு தகவல்களை கேட்கலாம். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் உணவகங்களை தேடுவது, புதிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஏஐ மூலம் பெறலாம். மேலும் நீண்ட மெசேஜ்களை மெட்டா உதவியுடன் சுருக்கமாக தெரிந்துகொள்ள முடியும்.

4. தனிப்பட்ட முறையில் ஏஐயுடன் சாட்செய்யலாம்

மெட்டா ஏஐயில் பிரைவேட் பிராசசிங் என்ற முறையில் ஏஐ கோரிக்கைகளை தனிப்பட்ட முறையில் செயல்படுத்தும் வாட்ஸ்அப் வழங்குகிறது. இதன் மூலம் ஏஐயிடம் அனுப்பப்படும் குறிப்பிட்ட தகவல்கள் சேமிக்கப்படாமல் செயல்படுத்தப்படும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : Wordmark-ஐ மாற்றும் இன்ஸ்டாகிராம்.. 10 ஆண்டுகள் கழித்து முக்கிய நடவடிக்கை!

5. வாட்ஸ்அப் வெப்பிலும் மெட்டா ஏஐ

வாடஸ்அப் வெப்பிலும் மெட்டா ஏஐயை மொபைல் வாட்ஸ்அப் செயலியில் மட்டுமின்றி, வாட்ஸ்அப் வெப் பதிப்பிலும் பயன்படுத்த முடியும்.இதற்காக தனியாக வாட்ஸ்அப்பை லாகின் செய்ய வேண்டியதில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே பயன்படுத்த முடியும்.

மெசேஜ் அனுப்புவது, வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்வது என்பதைக் கடந்து, ஏஐ மூலம் படங்களை உருவாக்குவது, சாட்களுக்க உதவுவது, புகைப்படங்களை எடிட் செய்வது, தகவல்களை தேடுவது என வாட்ஸ்அப்பின் பயன்பாடுகள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன. ஒரே செயலியில் அனைத்து வேலைகளையும் எளிதாக செய்யும் வகையில் வாட்ஸ்அப் செயலி நமக்கு பெரிதும் உதவுகிறது.

Follow Us