நெருங்கும் தீபாவளி – தமிழகம் முழுவதும் 45 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை
Tamil Nadu Vigilance Raids : அரசு அலுவலகங்களில் நடைபெறும் பணப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும், ஒவ்வோர் ஆண்டும் பண்டிகைக் காலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனைகளை மேற்கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, அக்டோபர் 23 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 45 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அக்டோபர் 23, 2026 இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்பாராத இந்தச் சோதனையால் அரசு அலுவலகங்களில் பரபரப்பு நிலவுகிறது.
எங்கெல்லாம் சோதனை?
சென்னை அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பொன்னேரி நகராட்சி அலுவலகம், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம், பரமக்குடி நகராட்சி அலுவலகம், ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண்டிகைக் காலப் புகார்கள்
தீபாவளி, பொங்கல், ஆங்கிலப் புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில், பொதுப்பணித் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதாகவும், லஞ்சம் கைமாறுவதாகவும் புகார்கள் வெளியானதாக கூறப்படுகிறது.




இதையும் படிக்க : தங்கம் உட்பட ஹாட்ரிக் பதக்கம்: ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்!
இதனையடுத்து, அரசு அலுவலகங்களில் நடைபெறும் பணப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும், ஒவ்வோர் ஆண்டும் பண்டிகைக் காலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனைகளை மேற்கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த 2026 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8, 2026 அன்று கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஏற்கெனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சோதனைகள் நடைபெறுகின்றன.
சோதனைகள் நிறைவடைந்த பின், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, பரிசுப் பொருள்கள் அல்லது ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டனவா என்பன போன்ற விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கையாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல், லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது சோதனைகள் நடத்தி, கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள், வட்டாட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், லஞ்சம் பெறுவதாகவும் புகார்கள் எழுவதுண்டு.
இதையும் படிக்க : பழனி பஞ்சாமிர்தத்துக்கு வாழைப்பழம் வழங்க டெண்டர்: ரூ.1 கோடி வைப்புத் தொகை – வெளியான அறிவிப்பு
குறிப்பாக தீபாவளியைக் காரணம் காட்டி பணம் பெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனை தவிர்க்க லஞ்ச ஒழிப்புத்துறை இந்த சோதனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் எங்கு எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.