AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பழனி பஞ்சாமிர்தத்துக்கு வாழைப்பழம் வழங்க டெண்டர்: ரூ.1 கோடி வைப்புத் தொகை – வெளியான அறிவிப்பு

Palani Murugan Temple : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் புகழ்பெற்ற பிரசாதமான பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு தேவையான வாழைப்பழங்களை வழங்குவதற்கு, ரூ.1 கோடி வைப்புத் தொகையுடன் கோயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக நகரும் கொட்டகைகள் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

பழனி பஞ்சாமிர்தத்துக்கு வாழைப்பழம் வழங்க டெண்டர்: ரூ.1 கோடி வைப்புத் தொகை – வெளியான அறிவிப்பு
பழனி முருகன் கோவில்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Oct 2026 16:03 PM IST

பழனி, அக்டோபர் 23 : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் புகழ்பெற்ற பிரசாதமான பஞ்சாமிர்தம் (Panjamirtham) தயாரிப்பதற்கு தேவையான வாழைப்பழங்களை வழங்குவதற்கு, ரூ.1 கோடி வைப்புத் தொகையுடன் கோயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. இதுதவிர, பக்தர்களின் வசதிக்காக மலைக்கோயில் தரிசன வரிசையிலும், கிரிவலப் பாதையிலும் நகரும் கொட்டகைகள் அமைப்பதற்கும் தனித்தனியே டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பஞ்சாமிர்தத்துக்கு 3 வகை வாழைப்பழங்கள்

பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்குத் தேவையான கற்பூரவள்ளி வாழைப்பழம், குடகு வாழைப்பழம், மலைவாழைப்பழம் ஆகிய 3 வகைப் பழங்களை வழங்குவதற்கு இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் ஆணை வழங்கப்படும் நாள் முதல் 2027 ஜூன் 30 வரை இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். இதற்கான வைப்புத் தொகை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழக வேளாண் துறையில் புதிய வேலைவாய்ப்புகள்.. 69 பேருக்கு நேரடி பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய்!!

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த டெண்டரில் பங்கேற்க விரும்புவோர், தமிழக அரசின் மின்னணு டெண்டர் இணையதளமான https://tntenders.gov.in வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் கட்டாயம். வைப்புத் தொகையையும் இதே இணையதளம் மூலமாகவே செலுத்த வேண்டும்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வருகிற 2026 நவம்பர் 17, காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 2026 நவம்பர் 26, காலை 10 மணி வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2026 நவம்பர் 26, காலை 11 மணி பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் டெண்டர் இறுதி செய்யப்படும் என்றும் இதற்கான அறிவிப்பைக் கோயில் இணை ஆணையர் ஆர்.எஸ். வெங்கடேஷ் வெளியிட்டுள்ளார்.

நகரும் கொட்டகை

மலைக்கோயிலில் ரூ.100 கட்டணச் சீட்டு மூலம் தரிசனம் செய்யும் பக்தர்கள் வெயிலிலும் மழையிலும் சிரமமின்றிக் காத்திருக்கும் வகையில், வரிசைப் பகுதியில் இரண்டாம் வகை நகரும் கொட்டகை அமைக்கப்படவுள்ளது. இதற்கான மதிப்பீடு ரூ.35.04 லட்சமாகவும் அதற்கான முன்வைப்புத் தொகையாக ரூ.28,000 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி தொடங்கிய 90 நாள்களுக்குள் இதை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பழனி மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில், 300 நகரும் கொட்டகைகள் மற்றும் தடுப்புகள் அமைப்பதற்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மதிப்பீடு ரூ.1.80 கோடி என்றும், இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.1,00,500 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி 270 நாள்களுக்குள் முடிக்கப்பட உள்ளது. தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு கொட்டகைப் பணிகளுக்கும் விண்ணப்பிக்க 2026 நவம்பர் 10 பிற்பகல் 2 மணி கடைசி நேரமாகும். அன்று மாலை 4 மணிக்கு டெண்டர்கள் திறக்கப்படும். இவற்றுக்கான அறிவிப்புகளைக் கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க : கோவையில் மாணவன் தற்கொலை விவகாரம்.. பள்ளி தலைமை ஆசியர் உள்பட இருவர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை!

புவிசார் குறியீடு பெற்ற பிரசாதம்

பழனி பஞ்சாமிர்தம், 2019 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு (GI Tag) பெற்றது குறிப்பிடத்தக்கது. உலக பிரசித்தி பெற்ற பஞ்சாமிருதம் வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, நெய், தேன், ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

Follow Us