AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எலக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருக்கிறீர்களா? சரியான முறையில் சார்ஜ் செய்வது எப்படி?

How to charge ev vehicle properly: விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை, இன்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் போலவே எலக்ட்ரிக் வாகனங்களும் பிரபலமாகி வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களை சரியான முறையில் 'சார்ஜிங் செய்வது மிகவும் அவசியம்.

எலக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருக்கிறீர்களா? சரியான முறையில் சார்ஜ் செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Aug 2026 21:19 PM IST

எலக்ட்ரிக் வாகனங்கள் நம் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பலரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறார்கள். இந்த நிலையில் அவற்றை முறையாக பராமரிப்பதும் மிகவும் அவசியம். குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சரியான முறையில் சார்ஜ் செய்வது எப்படி?

சிலர் தங்கள் வாகனங்களை வீட்டிலேயே சார்ஜ் செய்கிறார்கள். வேறு சிலர் பொது சார்ஜிங் நிலையங்களைச் சார்ந்திருக்கிறார்கள். நீங்கள் எங்கு சார்ஜ் செய்தாலும், சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றைச் சரியாகப் பின்பற்றாவிட்டால், நீங்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடலாம். வாகனங்களை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் சார்ஜ் செய்வதற்கான முறைகளை இப்போது பார்ப்போம்.

இதையும் படிக்க : கூகுள் பிக்சல் 10-க்கு பிளிப்கார்ட் வழங்கும் அட்டகாசமான சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!

முதலாவதாக, உங்கள் வாகனத்திற்கு ஏற்ற சார்ஜிங் நிலையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாகனத்தின் பேட்டரி ஸ்பெஷிஃபிகேஷன் பொருந்தக்கூடிய சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்தவும். தொடர்ந்து ‘ஃபாஸ்ட் சார்ஜிங்’ செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்வது பேட்டரியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். வீட்டிலேயே சார்ஜ் செய்வதே மிகவும் சிறந்தது. வீட்டிலேயே சார்ஜ் செய்தாலும், அதற்காக வாகனத்துடன் வழங்கப்பட்ட அசல் சார்ஜரையே பயன்படுத்த வேண்டும்.

எலக்ட்ரிக் வாகனங்களைப் பாதுகாப்பான முறையில் சார்ஜ் செய்ய வேண்டும். பலத்த மழை அல்லது பனிப்பொழிவு உள்ள நேரங்களில் சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும். சார்ஜ் செய்யத் தேர்ந்தெடுக்கும் இடம் உலர்ந்ததாகவும், நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சார்ஜ் செய்யும்போது ஏதேனும் அசாதாரண சத்தம் அல்லது துர்நாற்றம் வீசினால், உடனடியாக சார்ஜிங் கேபிளைத் துண்டித்துவிடவும்.

இதையும் படிக்க : UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..

இரவு முழுவதும் சார்ஜ் செய்வது பலரும் பின்பற்றும் ஒரு தவறான நடைமுறையாகும். சந்தையில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களில் ‘பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ இருந்தாலும், நமது சார்ஜிங் பழக்கவழக்கங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு முறையும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வது சரியல்ல. இது பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும். தினசரி பயன்பாட்டிற்கு 80 சதவீதம் வரை சார்ஜ் செய்வதே சிறந்தது. சார்ஜர்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். சார்ஜ் செய்யத் தொடங்கும் முன், சார்ஜிங் கேபிளில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். சரியான சார்ஜிங் முறைகளைப் பின்பற்றுவது பேட்டரியின் ஆரோக்கியத்தையும் வாகனத்தின் ஆயுளையும் அதிகரிக்க உதவும்.

 

Follow Us