கூகுள் பிக்சல் 10-க்கு பிளிப்கார்ட் வழங்கும் அட்டகாசமான சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!
Flipkart Freedom Sale 2026 | பிளிப்கார்ட் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது ப்ரீடம் சேலை நடத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படும் நிலையில், பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
கூகுள் (Google) நிறுவனம் தனது அடுத்த புதிய மாடல் ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் 11-ஐ (Google Pixel 11 Smartphone) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தையில் நாளை (ஆகஸ்ட் 12, 2026) அறிமுகமாகும் நிலையில், இந்தியாவில் ஆகஸ்ட் 13, 2026 அன்று அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில் தான் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு (Google Pixel 10 Smartphone), பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்டில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி
இந்தியா இன்னும் சில நாட்களில் தனது 80வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இதன் காரணமாக பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது ப்ரீடம் சேலை செயல்படுத்தி வருகின்றன. பிளிப்கார்ட் நிறுவனம் ஆகஸ்ட் 08, 2026 முதல் தனது ப்ரீடம் சேலை நடத்தி வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஸ்மார்ட்போன்கள் முதல் கேட்ஜெட்ஸ் வரை.. அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்ன?




கூகுள் பிக்சல் 10-க்கு பிளிப்கார்டில் என்ன தள்ளுபடி
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ரூ.74,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது, அறிமுக விலையான ரூ.79,999-ல் இருந்து ரூ.5,000 குறைவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவே நீங்கள் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உங்களுக்கு கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும். அதன் மூலம் வெறும் ரூ.69,999-க்கே கூகுள் பிக்சல் 10 கிடைக்கும்.
இதையும் படிங்க : ஐபோன்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கும் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல்!
இதுமட்டுமன்றி, ரூ.59,400 வரை எக்ஸ்சேஞ் சலுகைகளையும் பிளிப்கார்ட் வழங்குகிறது. நீங்கள் எக்ஸ்சேஞ் செய்யும் ஸ்மார்ட்போன் எந்த நிலையில் உள்ளது என்பதை பொறுத்து அதற்கான தொகை நிர்ணயம் செய்யப்படும். உதாரணமாக நீங்கள் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ரூ.14,050 எக்ஸ்சேஞ் போனஸாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.