UPI பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா? யாருக்கு பொருந்தும்? மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்..
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "தவறான தகவல்களை பரப்புவதற்கு முன்பு உண்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக விவாதத்தில் பங்கேற்றிருந்தால், இந்த விவகாரம் குறித்து அவையிலேயே விரிவாக விவாதிக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 7, 2026: UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) விதிக்கப்பட்டாலும், அது வாடிக்கையாளர்களுக்கு அல்ல; வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “UPI சேவையைப் பயன்படுத்தும் சாதாரண மக்களே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்று சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், அவரது கருத்தை மறுத்து விளக்கம் வெளியிட்டார்.
UPI சேவையைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த நேரிடும்:
அவர் வெளியிட்ட பதிவில், “வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். இறுதி வாடிக்கையாளர்கள் அல்லது பயனர்களுக்கு இது பொருந்தாது. MDR மூலம் கிடைக்கும் வருவாய், வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் பாதுகாப்பு வசதிகளில் கூடுதல் முதலீடு செய்ய உதவும். அதன் பலனை அனைத்து UPI பயனர்களும் பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான “வரி மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகே, தேசிய கட்டண கழகம் (NPCI) தலைமையிலான UPI மற்றும் சேவைகள் வழிகாட்டும் குழு MDR தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: தேசிய கைத்தறி தினம்.. கைத்தறி ஆடைகள் அணிந்து வீடியோவை பகிர பிரதமர் மோடி வலியுறுத்தல்..
இந்த மசோதா மூலம், எந்தெந்த மின்னணு கட்டண முறைகள் அல்லது பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை மத்திய அரசு அறிவிப்பு மூலம் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில், MDR சுமை இறுதியில் பொதுமக்கள் மீதே விழும் என்றும், UPI சேவையை நிதி ரீதியாக நிலைநிறுத்துவதற்கான ஒரே வழி இதுதான் என்ற அரசின் வாதம் முற்றிலும் தவறானது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
நிதி அமைச்சர் கொடுத்த விளக்கம்:
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “தவறான தகவல்களை பரப்புவதற்கு முன்பு உண்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக விவாதத்தில் பங்கேற்றிருந்தால், இந்த விவகாரம் குறித்து அவையிலேயே விரிவாக விவாதிக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான வரி மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா மூலம், Payment and Settlement Systems Act, 2007-இன் பிரிவு 10(A)-ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், தற்போது UPI மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளுக்கு நடைமுறையில் உள்ள ‘Zero MDR’ முறையை எதிர்காலத்தில் மாற்றுவதற்கான சட்டபூர்வ அதிகாரம் அரசுக்கு கிடைக்கும்.
அதேநேரத்தில், இந்த மசோதா உடனடியாக MDR கட்டணத்தை அறிமுகப்படுத்தவில்லை என்றும், எந்தக் கட்டணத் தொகையையும் நிர்ணயிக்கவில்லை என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது. மாறாக, எதிர்காலத்தில் தேவைப்பட்டால் ‘Zero MDR’ கொள்கையில் மாற்றம் செய்யும் சட்ட அடித்தளத்தை மட்டுமே இந்த மசோதா உருவாக்குகிறது.