AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இறுதி முடிவி எடுக்கப்படவில்லை எனில் எதற்கு அரசாணை வெளியிடப்பட்டது? கனிமொழி கேள்வி..

புதிய விளக்கத்தை சுட்டிக்காட்டி கனிமொழி தனது சமூக வலைதளப் பதிவில், “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதி முடிவி எடுக்கப்படவில்லை எனில் எதற்கு அரசாணை வெளியிடப்பட்டது? கனிமொழி கேள்வி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Sep 2026 22:10 PM IST

செப்டம்பர் 21, 2026: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 8-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்:

செப்டம்பர் 3-ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னையில் நவீன வசதிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து, செப்டம்பர் 8-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், மயிலாப்பூர் பகுதியில் 25.55 ஏக்கர் நிலத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டதுடன், விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த திட்டத்திற்கு பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலோர பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு பாதிக்கப்படும் என எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

Also Read: கரூர் சம்பவம் ஓராண்டு நினைவு: 41 பேரின் நினைவாக நினைவுச்சின்னம் – செப்.27ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் விஜய்

இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை:

இதனிடையே, புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், தற்போதைக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை மட்டுமே தயாரிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். DPR தயாரிக்கப்பட்ட பின்னர் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனில் எதற்கு அரசாணை வெளியிடப்பட்டது?


இந்த விளக்கத்தை சுட்டிக்காட்டி கனிமொழி தனது சமூக வலைதளப் பதிவில், “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால், பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக திட்டம் தொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us