பள்ளி ஆசிரியையை சுட்டுக்கொன்ற இளைஞர்.. தானும் தற்கொலை செய்துக்கொண்டார்!
School Teacher Nishad Fathima Shot Dead | உத்தர பிரதேசத்தில் பள்ளி ஆரியையாக பணியாற்றி வந்த நிஷாத் பாத்திமா என்ற பெண்ணை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்துள்ளார். இந்த நிலையில், அவரும் தற்கொலை செய்துக்கொண்டு சம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லக்னோ, செப்டம்பர் 21 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஹிதாயத் நகர் பகுதியை சேர்ந்த பெண் நிஷாத் பாத்திமா. 26 வயதாகும் இவர், லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அந்த வகையில், இன்று (செப்டம்பர் 21, 2026) காலையில் நிஷாத் பாத்திமா பள்ளிக்கு சென்று வழக்கம் போல மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருந்துள்ளார். அப்போது தான் ஒரு கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.
பள்ளி ஆசிரியையை சுட்டுக்கொன்ற இளைஞர்
பாத்திமா பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது சரியாக காலை 11.30 மணிக்கு பாத்திமாவை சந்திப்பதற்காக முகமது சவுத் என்ற 28 வயது இளைஞர் ஒருவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அவர், நேராக இரண்டாவது மாடியில் உள்ள பாத்திமாவின் வகுப்பறைக்கு சென்றுள்ளார். முகமதுவை கண்ட பாத்திமா, அதிர்ச்சியில் உறைந்த நிலையில் அவரை உடனடியாக பள்ளியை விட்டு வெளியே செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க : “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” திடீர் பெயர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா? நெகிழ்ச்சி பின்னணி!
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளம் பெண்
அப்போது பாத்திமாவுக்கு, முகதுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முகமது, பாத்திமாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த பாத்திமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், முகமது, பாத்திமாவை சுட்ட துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையும் படிங்க : டிக்கெட் எடுக்காமல் மாட்டிக்கொண்ட இளம் பெண்.. திடீரென ஆடைகளை கிழித்துக்கொண்டு நாடகம்!
பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த சம்பவத்தை கண்டு அங்கிருந்த பள்ளி மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இதனால், பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பாத்திமா, முகமது ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.