AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிக்கெட் எடுக்காமல் மாட்டிக்கொண்ட இளம் பெண்.. திடீரென ஆடைகளை கிழித்துக்கொண்டு நாடகம்!

Young Woman Tears Her Own Clothes | பீகாரில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பரிசோதகரிடம் சிக்கிக்கொண்ட இளம் பெண், பரிசோதகர் டிக்கெட் கேட்ட நிலையில் தனது ஆடைகளை கிழித்துக்கொண்டு நாடகம் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் எடுக்காமல் மாட்டிக்கொண்ட இளம் பெண்.. திடீரென ஆடைகளை கிழித்துக்கொண்டு நாடகம்!
ஆடைகளை கிழித்துக்கொண்ட இளம் பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Sep 2026 23:20 PM IST

பாட்னா, செப்டம்பர் 20 : பீகாரில் (Bihar) ஓடும் ரயிலில், டிக்கெட் பரிசோதகர் இளம் பெண் ஒருவரிடம் டிக்கெட் கேட்ட நிலையில், அந்த பெண் திடீரென தனது ஆடைகளை கிழித்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியைன் ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம் பெண் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த நிலையில், பரிசோதகர் டிக்கெட் கேட்டபோது இத்தகைய செயலை செய்துள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிக்கெட் கேட்ட பரிசோதகர் – ஆடையை கிழித்துக்கொண்ட இளம் பெண்

பீகார் மாநிலம், தானாபூரில் இருந்து செகந்திராபாத் நோக்கி சென்று விரைவு ரயிலில் ராதிகா திவாரி என்ற 19 வயது இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவர் அந்த ரயிலில் ஏசி இரண்டாம் பெட்டியில் பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பெட்டிக்கு வந்த பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த அந்த இளம் பெண் டிக்கெட் இல்லாமல் முழித்துள்ளார்.

இதையும் படிங்க : “இந்திய மக்களாகிய நாம்” – என அரசியலமைப்புச் சட்டம் ஏன் தொடங்குகிறது? பின்னணி என்ன?

லஞ்சம் கொடுத்த இளம் பெண்

பரிசோதகர் இளம் பெண்ணிடம் டிக்கெட்டை கொடுக்குமாறு வலியுறுத்திய நிலையில், அந்த இளம் பெண்ணிடம் பணத்தை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்து தன்னை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள பரிசோதகர் இளம் பெண்ணுக்கு அபராதம் விதித்துள்ளார். அதனை எதிர்ப்பார்க்காத இளம் பெண், தனது போனை எடுத்து எனது அண்ணன் கூட டிடிஇ தான் பேசுகிறாயா என கேட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஒருவரை இந்தியக் குடிமகனாக ஆக்குவது எது தெரியுமா? மாறி வரும் விதிகளின் கதை!

ஆனால், அதற்கெல்லாம் இசைவு தெரிவிக்காத பரிசோதகர் இளம் பெண்ணை கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனால், கடும் கோபமடைந்த அந்த இளம் பெண் தனது ஆடைகளை கிழித்துக்கொண்டு நாடகம் நடத்தியுள்ளார். பிறகு தனது வீட்டிற்கு போன் செய்த அவர், டிக்கெட் பரிசோதகர் தன்னை தவறாக தொட்டதாக கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, டிக்கெட் பரிசோதகர் மீது புகார் கொடுப்பேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

இதனால் பொறுமையை இழந்த பரிசோதகர் ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, ரயில் நிலையத்தில் காத்திருந்த ரயில்வே போலீசார், இளம் பெண்ணை அழைத்துச் சென்றனர்.

Follow Us