பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது லாவா போல்டு என்4 ப்ரோ!
Lava Bold N4 Pro Smartphone Introduced In India | லாவா நிறுவனம் தொடர்ந்து தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தனது பட்ஜெட் ஸ்மார்ட்போனான லாவா போல்டு என்4 ப்ரோ ஸ்மார்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை (Budget Smartphones) அறிமுகம் செய்யும் நிறுவனமாக லாவா உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், அது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் தான், லாவா நிறுவனம் தனது புதிய படைப்பான லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை (Lava Bold N4 Pro 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி அறிமுகம்
லாவா நிறுவனம் தனது லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை (Lava Fold N4 Pro 5G Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மாதம் தனது லாவா போல்டு என்4 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, தற்போது தனது லாவா போல்டு என்4 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜியை விடவும் பெரிய பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது.




இதையும் படிங்க : ஐபோன் 18 சீரீஸ் விற்பனை தொடக்கம்.. ஆப்பிள் ஸ்டோர்களில் குவியும் வாடிக்கையாளர்கள்!
லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
LAVA Bold N4 Pro 5G is here with a 6000mAh battery at ₹13,999! 🔥📱
Lava’s latest budget 5G phone packs a 6.75-inch 120Hz display, Unisoc T8200, 6GB RAM + 128GB storage, 50MP dual camera and Android 16 with a 6000mAh battery to keep it going. 👀
LAVA Bold N4 Pro 5G, LAVA Bold… pic.twitter.com/zOrCuIU42R
— My Mobile (@MyMobile_India) September 18, 2026
இந்த ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் LCD HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Unisoc T8200 5G சிப்செட் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 6ஜிபி ரேம் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் கேமரா செட் அப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.13,999-க்கு அறிமுகமாகியுள்ளது.