ஐபோன் 18 சீரீஸ் விற்பனை தொடக்கம்.. ஆப்பிள் ஸ்டோர்களில் குவியும் வாடிக்கையாளர்கள்!
iPhone 18 Pro and 18 Pro Max On Sale | ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போன்கள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 09, 2026 அன்று நடத்திய தனது “Surprise and Shine” நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple iPhone 18 Series Smartphones) அறிமுகம் செய்தது. அதாவது, ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ (Apple iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 18 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதுமட்டுமன்றி, இதுவரை ஆப்பிள் செய்யாத புதிய சாதனையாக ஆப்பிள் டுயோ ஸ்மார்ட்போனையும் (Apple Duo Smartphone) அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று (செப்டம்பர் 18, 2026) விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஐபோன் 18
ஆப்பிள் நிறுவனம் தனது 18 சீரீஸில் ஆப்பிள் 18 ப்ரோ மற்றும் ஆப்பிள் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை காலை 8 மணி முதல் தொடங்கிய நிலையில், ஆப்பிள் ஸ்டோர்களின் வாசல்களில் வாடிக்கையாளர்கள் மிக நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அனைத்து ஆப்பிள் ஸ்டோர்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையும் படிங்க : பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது முதல்?
காலை முதலே வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்
#WATCH | Maharashtra: Apple begins the official sale of the iPhone 18 Pro and iPhone 18 Pro Max; a large number of people throng the company’s store at Jio World Drive in Mumbai pic.twitter.com/PyFjeG24ag
— ANI (@ANI) September 18, 2026
இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் காலை முதலே ஆப்பிள் ஸ்டோர்களின் வாசல்களில் வரிசையில் காத்திருந்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸை விடவும் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அதிக விலைக்கு அறிமுகமாகியுள்ளன. குறிப்பாக, 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும், 2டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண் மாடல் ஐபோன் ரூ.3,14,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : உங்கள் துறையில் நீடித்து இருக்க ஏஐ மட்டும் போதுமா?.. இவையும் மிக முக்கியம்!
இதேபோல 256 ஜிபி ஸ்டோரே கொண்ட ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேஸ் ஆரம்ப விலை ரூ.1,79,900 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.