பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்.. மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது முதல்?
Flipkart Big Billion Days Sale 2026 | பிளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய சேல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், தனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026-ஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த சேலின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் தொடர்ந்து தனது சேல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான தனது பிக் பில்லியன் டேஸ் சேலை (Flipkart 2026 Big Billion Days Sale) அறிவித்துள்ளது. இந்த சேல் இந்தியாவில் அக்டோபர் 09, 2026 அன்று தொடங்க உள்ளது. இந்த சேலில், பிளிப்கார்ட் நிறுவனம் ஏராளமான சலுகைகளை வழங்க உள்ள நிலையில், வங்கி தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகளை தெரிந்துக்கொள்ளும் வகையில், மைக்ரோ சைட் ஒன்றையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்த பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனம், 2026 ஆம் ஆண்டுக்கான தனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேல் அக்டோபர் 09, 2026 அன்று தொடங்கும் நிலையில், பிளிப்கார்ட் பிளஸ், பிளிப்கார்ட் பிளாக் மற்றும் பிளிப்கார்ட் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஒரு நாள் முன்கூட்டியே சேலின் சலுகைகள் கிடைக்கும். அதாவது, அக்டோபர் 08, 2026 அன்றே இந்த பயனர்கள் சேலின் சிறப்பு அம்சங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேலில் பல வகையான மின் சாதன பொருட்களை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : குறைந்த விலையில் ஹோம் தியேட்டர் அனுபவம் – ரூ. 25,000க்குள் சிறந்த டால்பி சவுண்ட் பார்ஸ்!
பிக் பில்லியன் டேஸ் – என்ன என்ன சலுகைகள்
இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் ஆக்சிஸ் பேங் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல, பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் பயனர்களும் 10 சதவீதம் தள்ளுபடியை பெற முடியும். இது தவிர கூடுதலாக, பிளிப்கார்ட் சூப்பர் மணி மூலம் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
இதையும் படிங்க : ஐபோன் டுயோவை ரூ.2.30 லட்சத்துக்கே வாங்கலாம்.. அதுவும் 2 நாட்கள் பாங்காக் டூர் உடன்.. எப்படி?
இந்த சேலில் என்ன என்ன பொருட்களுக்கு எவ்வளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படும் என்பது குறித்து பிளிப்கார்ட் எந்தவித பட்டியலையும் வெளியிடாமல் உள்ளது. ஆனால், இந்த சேலில் ஏராளமான மின்சாதன பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.



