AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐபோன் டுயோவை ரூ.2.30 லட்சத்துக்கே வாங்கலாம்.. அதுவும் 2 நாட்கள் பாங்காக் டூர் உடன்.. எப்படி?

Buy iPhone Duo At Lowest Price | ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டுயோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.3 லட்சமாக உள்ள நிலையில், இதனை வெறும் ரூ.2.30 லட்சத்திற்கு வாங்கலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் டுயோவை ரூ.2.30 லட்சத்துக்கே வாங்கலாம்.. அதுவும் 2 நாட்கள் பாங்காக் டூர் உடன்.. எப்படி?
ஐபோன் டுயோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Sep 2026 12:44 PM IST

ஆப்பிள் (Apple) நிறுவனம் சமீபத்தில் நடத்திய தனது Surprise and Shine நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ (Apple iPhone 18 Pro), 18 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 18 Pro Max) மற்றும் ஐபோன் டுயோ (iPhone Duo) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதில் பலரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தது தான் ஐபோன் டுயோ. காரணம், இது ஆப்பிள் அறிமுகம் செய்த முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இது பல அட்டகாசமான் அம்சங்களை கொண்டுள்ளது. அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் தலையை சுற்றும் விதமாக உள்ளது. ஆனால், ஐபோன் டுயோ ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.3 லட்சத்துக்கு அறிமுகமான ஐபோன் டுயோ

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டுயோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.2,99,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரூ.3 லட்சத்துக்கு ரூ.100 குறைவாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. ஐபோன் டுயோ அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக மிகுந்த ஆர்வத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் அதன் விலையை பார்த்து மனமுடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : அறிமுகமானது ஐபோன் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. கேமரா, பேட்டரியில் அதிரடி அப்டேட்.. இந்தியாவில் இதன் விலை என்ன தெரியுமா?

குறைந்த விலைக்கு ஐபோன் டுயோவை வாங்கலாம்

உங்களுக்கு வெளி நாடுகளில் சொந்தக்காரர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் ஐபோன் டுயோவை வாங்கிவர கூறலாம். ஆனால், உங்களுக்கு அத்தகைய சொந்தங்கள் யாரும் இல்லை என்றால் கவலை வேண்டாம். நீங்களே பாங்காக்கிற்கு சென்று குறைந்த விலைக்கே வாங்கிக்கொள்ளலாம். ஐபோன் டுயோ பாங்காக்கில் 78,999 தாய் பாட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.2,30,000 ஆகும். அப்படியென்றால், இந்தியாவை விட ரூ.70,000 குறைவு.

இதையும் படிங்க : 2030 முடிவதற்குள் ஏஐ மனிதர்களையே அழித்துவிடுமா? ஆன்த்ரோபிக் ஆய்வாளர் எச்சரிக்கை

பாங்காக்கிற்கு செல்லவே செலவாகும், இந்த நிலையில் எப்படி பணத்தை சேமிக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அவ்வாறு பாங்காக் சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு, மீண்டும் இந்தியாவுக்கு திரும்புனாலும் உங்களால் பணத்தை சேமிக்க முடியும். நீங்கள் விமானத்தில் பாங்காக் செய்கிறீர்கள் என்றால் விமான கட்டண ரூ.30,000 வரும். மீதம் ரூ.40,000 இருக்கும். அதில் நீங்கள் இரண்டு நாட்கள் அங்கு விடுதியில் தங்குகிறீர்கள் என்றால் அதற்கு ரூ.10,000 ஆகும். மீதம் ரூ.30,000 இருக்கும். பிறகு அங்கு செலவு செய்ய ரூ.15,000 என்று வைத்துக்கொண்டாலும் ரூ.15,000 மீதம் இருக்கும்.

அதாவது, இரண்டு நாட்கள் பாங்காக் சுற்றுலா உடன் சேர்த்து ஐபோன் டுயோவை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

Follow Us