AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆப்பிள் 17 விலை அதிரடி உயர்வு.. ரூ.1 லட்சத்தை எட்டியது.. வாடிக்கையாளர்கள் ஷாக்!

Apple Increased Price Of Apple 17 iPhone | ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை நேற்று (செப்டம்பர் 09, 2026) அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆப்பிள் 17 ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக உயர்வை சந்தித்துள்ளது.

ஆப்பிள் 17 விலை அதிரடி உயர்வு.. ரூ.1 லட்சத்தை எட்டியது.. வாடிக்கையாளர்கள் ஷாக்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Sep 2026 13:03 PM IST

பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸில் பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. அதாவது, வழக்கமாக புதிய மாடல் ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படும்போது, முந்தைய மாடல் ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்படும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக ஆப்பிள் 17 ஸ்மார்ட்போனின் (Apple 17 Smartphone) விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்,  ஆப்பிள் 17 ஸ்மார்ட்போனின் விலை உயர்ந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.17,000 உயர்வை சந்தித்த ஆப்பிள் 17 ஸ்மார்ட்போன்

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது, ரூ.17,000 வரை அதிரடியாக விலையை உயர்த்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனம், ரூ.82,900-க்கு இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தற்போது விலை உயர்வை சந்தித்துள்ளதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.99,900 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,24,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஐபோன் 17 ஸ்மார்ட்போன் ரூ.1 லட்சத்தை தாண்ட வெறும் ரூ.100 மட்டுமே உள்ளது.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் வைரலாகும் 80ஸ் போட்டோ டிரெண்ட் – எப்படி உருவாக்குவது?

ஐபோன் 17 விலை உயர்வை சந்திக்க காரணம் என்ன?

ஆப்பிள் நிறுவனம் விலை உயர்த்துவது இது முதல் முறை இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக், ஐபேட் உள்ளிட்டவற்றுக்கான விலையை உயர்த்தியது. அதனை தொடர்ந்து தான், இந்த விலை உயர்வு முயற்சியை ஆப்பிள் கையில் எடுத்துள்ளது. ரேம் மெமரி பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. இதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனம் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us