AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் 80ஸ் போட்டோ டிரெண்ட் – எப்படி உருவாக்குவது?

ChatGPT 80s Photo Trend: சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏஐ போட்டோ டிரெண்ட் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக 80களின் திரைப்பட நடிகர்கள் போன்ற ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதனை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் 80ஸ் போட்டோ டிரெண்ட்  – எப்படி உருவாக்குவது?
அசோக் செல்வன் - ப்ரீத்தி முகந்தனின் 80ஸ் டிரெண்ட் போட்டோ
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Sep 2026 20:03 PM IST

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏஐ போட்டோ டிரெண்ட் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக 80களின் திரைப்பட நடிகர்கள் போன்ற ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. சாட்ஜிபிடியில் இந்த புகைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். தமிழ் திரைப்பட பிரபலங்களான அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் போன்றோரும் இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர். சாட்ஜிபிடி மூலம் 80ஸ் ரெட்ரோ புகைப்படங்களை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் 80ஸ் போட்டோ டிரெண்ட்

கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டூடியோ கிப்லி ஸ்டைலில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பெரும் டிரெண்டாகின. தற்போது அந்த வரிசையில் 1980களின் இந்திய சினிமா மற்றும் ஃபேஷன் பாணியை அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய டிரெண்ட் கவனம் பெற்றுள்ளது.இதனை திரையுலக பிரபலங்களும் தங்கள் புகைப்படங்களை ரெட்ரோ ஸ்டைலில் மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : பட்ஜெட் விலையில் அறிமுகமானது போக்கோ எக்ஸ்8 சீரீஸ்.. முழு விவரம் இதோ!

இந்த டிரெண்டில், பயனர்கள் தங்களது புகைப்படத்தை சாட்ஜிபிடியில் பதிவேற்றி, அதை 1980களில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல மாற்றி அப்லோடு செய்கின்றனர். ஆனால் இதில் நீங்கள் கொடுக்கும் பிராம்ப்ட் மிக முக்கியம். நீங்கள் கொடுக்கப்படும் பிராம்ப்டை பொறுத்து, உங்களது புகைப்படம் கிடைக்கும். குறிப்பாக, பழைய இந்திய திரைப்பட காட்சிகள், விண்டேஜ் ஸ்டுடியோ போட்டோ, பழைய குடும்ப ஆல்பம் அல்லது 1980களின் திரைப்பட இதழ் அட்டைப்படம் போன்ற தோற்றத்தை உருவாக்க முடியும்.

80ஸ் ஸ்டைலில் ப்ரீத்தி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் போட்டோ

 

பெண்களின் புகைப்படங்களில் பழைய காலத்து வண்ணமயமான சேலைகள், சுருள் முடி, பெரிய காதணிகள், 1980களின் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் ஆகியவற்றைச் சேர்க்கலாம். அதேபோல், ஆண்களின் புகைப்படங்களில் பெரிய காலருடன் கூடிய ஷர்ட், பெல்ஸ் பேன்ட், அடர்த்தியான மீசை மற்றும் அக்காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நீண்ட சுருள் வடிவ ஹேர் ஸ்டைல் போன்றவற்றை உருவாக்க முடியும்.

இதையும் படிக்க : குரோமில் 12 பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்த கூகுள் – எப்படி அப்டேட் செய்வது?

சாட்ஜிபிடி மூலம் 80s புகைப்படத்தை உருவாக்குவது எப்படி?

இந்த புகைப்படத்தை உருவாக்க தொழில்முறை போட்டோ எடிட்டிங் திறன் தேவையில்லை. சாட்ஜிபிடியிடம் குறிப்பிட்ட பிராம்ப்ட் பயன்படுத்தி எளிதாக உருவாக்கலாம்.

1. சாட்ஜிபிடிக்கு செல்லவும்

2. அதில் பிளஸ் (+) பட்டனைத் தேர்வு செய்து, உங்களது தெளிவான புகைப்படத்தை அப்லோட் செய்யவும். நல்ல வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட, முகம் தெளிவாகத் தெரியும் புகைப்படத்தை அப்லோட் செய்தால் சிறந்த முடிவு கிடைக்கும்.

3. நீங்கள் விரும்பும் 80ஸ் ஸ்டைலில் எந்த மாதிரியான உடை, ஹேர் ஸ்டைல், பின்னணி, வெளிச்சம் மற்றும் பழைய புகைப்படத்தின் வடிவமைப்பு வேண்டும் என்பதை பிராம்ப்ட்டில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

4. இதில் சாட்ஜிபிடியிடம் மறக்காமல் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது. உங்கள் முகத்தின் அடையாளம் காணக்கூடிய அம்சங்கள் மற்றும் இயற்கையான ஸ்கின் டோன் ஆகியவை அப்படியே இருக்க வேண்டும் என்று பிராம்ப்டில் குறிப்பிட வேண்டும்.

5. ஏஐ உருவாக்கிய புகைப்படத்தில் ஏதேனும் மாற்றம் தேவையெனில், மீண்டும் குறிப்பிட்ட மாற்றங்களை மட்டும் சொல்லி புகைப்படத்தை மேம்படுத்தலாம்.

Follow Us