AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நமக்கே தெரியாமல் பணம் எடுக்கப்படுமா? வருகிறது யுபிஜயில் ஏஐ வசதி – ஆபத்தா?

AI UPI Payments : இந்தியாவில் ஏஐ ஏஜென்ட் மூலம் யுபிஐயில் தானாகவே பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கா புதிய கட்டமைப்பு உருவாகி வருகிறது. பயனரிடம் அனுமதி பெறாமலயே தன்னிச்சையாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமக்கே தெரியாமல் பணம் எடுக்கப்படுமா? வருகிறது யுபிஜயில் ஏஐ வசதி – ஆபத்தா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Sep 2026 19:35 PM IST

பெரிய ஷாப்பிங் மால்கள் முதல் வீட்டருகே இருக்கும் சிறிய பெட்டி கடைகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ மயமாக மாறிவிட்டன. எல்லா இடத்திலும் பணம் எடுத்து செல்ல வேண்டிய தேவையை குறைத்துள்ளதால் இது வரப்பிரசாதமாக மாறி வருகிறது. இந்த நிலையில் இந்த யுபிஐயின் அடுத்த கட்டமாக ஏஐ வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பயனரிடம் அனுமதி பெறாமலயே தன்னிச்சையாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுபிஐயில் வருகிறது புதிய ஏஐ ஏஜென்ட்

இந்தியாவில் யுபிஐ பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆரம்பகட்டத்தில் பாஸ்வேர்டு, பின், ஓடிபி என ஒவ்வொரு பரிவர்த்தனையின்போது பயனரிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலை இருந்தது. இது நம் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற உணர்வை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து முக அடையாள சரிபார்ப்பு, கைரேகை போன்ற பாதுகாப்பு அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையும் படிக்க : 16 வயதில் AI Start Up.. தந்தைக்கே வேலை கொடுத்த சிறுவன்.. வியக்க வைக்கும் கேரளா சிறுவன்!

இந்த நிலையில் இதற்கு அடுத்தகட்டமாக ஏஐ ஏஜென்ட் மூலம் தானாகவே பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கா புதிய கட்டமைப்பு உருவாகி வருகிறது. விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி செயல்படும்?

இதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சார்பில் புதிதாக ஒருங்கிணைந்த ஏஐென்ட் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் பயனர்கள் முன்பே வழங்கிய அனுமதியின் படி இந்த ஏஐ செயல்படும். உதாரணமாக ஆன்லைனில் ஒரு பொருள் வாங்குகிறீர்கள் எனக்கொள்வோம். இதனை ஏஐ ஏஜென்டிடம் சொன்னால் பல்வேறு தளங்களை ஆராய்ந்து விலையை ஒப்பிட்டு சிறந்த ஆஃப்ர் உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொண்டு இந்த ஏஐ ஏஜென்ட் முடிவெடுக்கும் வகையில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் குறிப்பிட்ட தொகைக்குள் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு பயனர்களிடம் அனுமதி கேட்காமல் பணப்பரிவர்த்தனைகைளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஏஐ ஏஜென்ட் செயல்படும் என கூறப்படுகிறது. மேலும் தற்போது பின், பாஸ்வேர்டு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ள நிலையில் ஏஐ ஏஜென்ட் அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் போது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் தானாகவே பணம் செலுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : புதிய அத்தியாயத்தை உருவாக்கும் ஆப்பிள்?.. செப்டம்பர் 9-ல் ஐபோன் அல்ட்ரா அறிமுகமாகிறதா?

ஆனால் இது பயனர்களின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கும். ஒவ்வொரு முறையும் நம் அனுமதி பெறுவதற்காக நாமாக குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்து விட்டால் அது செயல்படும் என்றும் கூறப்படுகிறது. மும்பையில் நடைபெறவுள்ள குளோபல் ஃபைன்டெக் ஃபெஸ்ட் மாநாட்டில் இந்த புதிய வசதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us