மனிதர்களின் கட்டளைகளை மதிக்காத ஏஐ.. கூட்டு சதியில் ஈடுபட்டதால் அதிர்ச்சி!
pen AI's AI Agents Avoided Commands From Human | ஓபன் ஏஐ நிறுவனத்தின் 1,000-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் மனிதர்களின் கட்டளைகளை மீறி செயல்பட்டுள்ளன. அவை, வேறு ஒரு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் எந்த மூலையில் திரும்பினாலும், எந்த துறைகளை பார்த்தாலும் அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் தாக்கம் தான் அதிகமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் பல்வேறு நன்மைகள் மற்றும் வளர்ச்சிகள் கிடைத்தாலும், அதில் சில ஆபத்துகளும் உள்ளன. இந்த ஆபத்துகள் குறித்து வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், மனிதர்களின் கட்டளைகளை மீறி ஏஐ கூட்டாக செயல்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன சம்பவம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூட்டாக சேர்ந்து வேறு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்த ஏஐ
சாட்ஜிபிடியின் உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏஜெண்டுகள் கட்டுப்பாட்டை மீறி தாமாகவே கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளன. அதாவது அந்த ஏஐ ஏஜெண்டுகள் இணைந்து வேறு ஒரு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்துள்ளன. இது தொடர்பாக ஏஐ ஆய்வு நிறுவனங்கள் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன.
இதையும் படிங்க : இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புதிய புரட்சி: UPI-யின் 10 ஆண்டு பயணம்