AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கி கடனை அடைக்க பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?.. விதிகள் கூறுவது என்ன?

Can You Take PF Money To Repay Bank Loan | பிஎஃப் பணம் ஏராளமான ஊழியர்களுக்கு முதன்மை சேமிப்பாக உள்ளது. இந்த நிலையில், பிஎஃப் பணத்தை எடுத்து வங்கி கடனை அடைக்க முடியுமா, அது குறித்து இபிஎஃப்ஓ விதிகள் கூறுவது என்ன என பார்க்கலாம்.

வங்கி கடனை அடைக்க பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?.. விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Aug 2026 23:42 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, போனஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். அதுமட்டுமன்றி, அவர்களுக்கு ஓய்வுக்கு பிறகு கடைசியாக வாங்கிய மாத சம்பளத்தில் இருந்து பாதி பணம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஆனால், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இத்தகைய சிறப்பு அம்சங்கள் எதுவும் கிடைக்காது. எனவே, அவர்கள் தங்களது ஓய்வுக்கும் சேர்த்து பணத்தை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தான், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பிஎஃப் (PF – Provident Fund) கணக்கை தொடங்கி ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கி பணத்தை வரவு வைத்து அவர்களது ஓய்வுக்கு பிறகு நிதி பாதுகாப்பை உருவாக்க வழிவகை செய்கிறது.

இவ்வாறு ஊழியர்களின் வாழ்வில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முக்கிய வரப்பிரசாதமாக விளங்கும் நிலையில், பிஎஃப் பணத்தை எடுத்து வங்கி கடனை செலுத்த முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் பணத்தை வைத்து வங்கி கடமை அடைக்கலாமா?

பிஎஃப் பணத்தை எடுத்து வங்கி கடனை அடைக்க வேண்டும் என்றால் அந்த நபர் குறைந்தது மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். அதேபோல அவர் வாங்கிய சொத்து, நிலம், வீடு என எதுவாக இருந்தாலும் அது அவரின் பெயரிலோ அல்லது அவரின் மனைவியின் பெயரிலோ இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரே ஒருமுறை மட்டும் வங்கி கடனை அடைப்பதற்காக பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

இதையும் படிங்க : இன்னும் 3 நாட்களே உள்ளன.. கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்கவில்லை என்றால் சிக்கல்!

எவ்வளவு பணம் எடுக்கலாம்?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட உறுப்பினர்கள், தங்களது 90 சதவீத பிஎஃப் பணத்தை வங்கி கடன் அடைப்பதற்காக எடுத்துகொள்ளலாம். இதுதவிர திருமணம், கல்வி, நோய் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள பயனர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us