AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வறுமையான குடும்ப பின்னணி… தனியாக ராக்கெட்டை விண்ணில் ஏவிய தமிழன்… – யார் இந்த ஆனந்த் மேகலிங்கம்?

Success Story : பள்ளிக்கு செல்ல 6 கி.மீ நடந்து செல்ல வேண்டிய கிராமத்தில் இருந்து இன்று விண்வெளி துறையில் அளப்பெரிய சாதனைகளை தமிழரான ஆனந்த் மேகலிங்கம் படைத்துள்ளார். இவர் தயாரித்த RHUMI-1 ராக்கெட் கடந்த 2024 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

வறுமையான குடும்ப பின்னணி… தனியாக ராக்கெட்டை விண்ணில் ஏவிய தமிழன்… – யார் இந்த ஆனந்த் மேகலிங்கம்?
ஆனந்த் மேகலிங்கம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Aug 2026 21:20 PM IST

தோல்வி என்பது ஒருவரின் எதிர்காலத்தை முடக்கிவிடாது என்பதற்கு என்பதற்கு சிறந்த உதாரணம் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந்த் மேகலிங்கம். பள்ளிக்கு செல்ல 6 கி.மீ நடந்து செல்ல வேண்டிய கிராமத்தில் இருந்து இன்று விண்வெளி துறையில் அளப்பெரிய சாதனைகளை படைத்துள்ளார். இவர் தயாரித்த RHUMI-1 ராக்கெட் கடந்த 2024 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இத்தனைக்கும் இவர் பெரிய பின்புலத்தில் இருந்து வரவில்லை. அவரது தந்தை விவாசய நிலங்களில் டிராக்டர் ஓட்டி வருமானம் ஈட்டி குடும்பத்தை காப்பாற்றினார்.

தனியாக ராக்கெட்டை விண்ணில் ஏவிய தமிழன்

தமிழ்நாட்டில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்த் மேகலிங்கம். குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிக்கு செல்ல 6 கி.மீ நடந்து செல்ல வேண்டியிருந்தது. அவரது தந்தை விவசாய நிலங்களில் டிராக்டர் ஓட்டி வருமானம் ஈட்டு வந்திருக்கிறார். வறுமை காரணமாக படிப்பை கைவிட வேண்டி பல்வேறு சூழ்நிலைகள் வந்தபோதும் அதனை எதிர்கொண்டு பள்ளிப்படிப்பை முடித்தார்.

இதையும் படிக்க : தினமும் ரூ.10க்கு கூலி வேலை பார்த்த சிறுவன்… இன்று ரூ.681 கோடி வருவாய் ஈட்டும் தொழிலதிபர்- யார் இந்த முஸ்தபா?

அடுத்த அதிர்ச்சி அவருக்கு கல்லூரியில் காத்திருந்தது. கல்லூரியில் முதல் செமஸ்டரிலேயே அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தார். நல்ல வேலை கிடைக்கும் என்பதால் கணினி அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த நிலையில் அவருக்கு அந்த துறையில் துளியும் ஆர்வமில்லை. இது அவரது மதிப்பெண்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் அவர் சோர்ந்து போகவில்லை. தனது உண்மையான ஆர்வம் எதில் என யோசிக்க தொடங்கினார்.

விளையாட்டில் இருந்த ஆர்வம் அவருக்கு மற்றொரு வாய்ப்பை பெற்று தந்தது. விளையாட்டுப்போட்டிகளில் வென்று பரிசுகளை வென்றதன் காரணமாக அவருக்கு மற்றொரு தனியார் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவருக்கு விருப்பமான ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். விமானங்கள் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் அவரை அந்தத் துறையில் தீவிரமாக ஈடுபடச் செய்தது. இந்த முறை அவர் வெறித்தனமாக படித்து தங்கப்பதக்கத்துடன் படிப்பை முடித்தார்.

ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம்

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆனந்த் மெகலிங்கம் ஸ்பேஸ் ஜோன் இந்தியா என்ற நிறுவனத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கினார். ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி திட்டங்களை மையமாகக் கொண்டு தனது நிறுவனத்தின் சார்பில் பணிகளில் ஈடுபட்டார். ஆரம்பகட்டத்தில் அவர் எதிர்பார்த்தபடி அவரால் செயல்பட முடியவில்லை. இதனால் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இரு்தது.

ஸ்போஸ் ஜோன் இந்தியா தொடங்கிய முக்கிய திட்டங்களில் ஒன்று RHUMI-1 என்ற விண்ணில் ராக்கெட்டை ஏவும் முயற்சியில் ஈடுபட்டார். பல கட்ட சாதனைகளுக்கு பிறகு அவரது RHUMI-1 என்ற ராக்கெட் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி தமிழ்நாட்டின் திருவிடந்தையில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொபைல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஹைப்ரிட் ராக்கெட், திட எரிபொருள் மற்றும் திரவ ஆக்சிடைசரைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

இதையும் படிக்க : Aadhaar : இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது.. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துவிட்டீர்களா?

அந்த ராக்கெட்டில் கியூப்சேட்ஸ் மற்றும் 50 PICO செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவை வளிமண்டலம் மற்றும் காலநிலை தொடர்பான ஆய்வுகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ராக்கெட்டை ஏவுவதற்கு முன்பு இக்னிஷன் பட்டனை அழுத்திய பிறகு சுமார் நான்கு விநாடிகள் காத்திருந்ததாக ஆனந்த் பின்னர் கூறியிருந்தார். அந்த சில விநாடிகள் தனது வாழ்க்கையில் மிக நீண்டதாக உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குடும்பத்தின் பொருளாதாரத்திற்காக டிராக்டர் ஓட்டிய தந்தையை, பின்னர் தனது விண்வெளி நிறுவனத்தின் இணை நிறுவனராக உயர்த்தியது அவரது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான பகுதியாக பார்க்கப்படுகிறது.

Follow Us