AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை” – கோவையில் நள்ளிரவில் அட்டகாசம்!

கோவை: துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டின் காம்பவுண்ட் கதவை உடைத்து பரபரப்பை ஏற்படுத்தியது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வீட்டின் இரும்பு காம்பவுண்ட் கதவை உடைத்து வளாகத்திற்குள் செல்ல முயன்றது. பின்னர் அங்கிருந்த வாழை மரத்தைப் பிடுங்கி சேதப்படுத்தியதுடன், அதன் இலைகளைத் தின்றது.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Aug 2026 07:41 AM IST

கோவை: துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டின் காம்பவுண்ட் கதவை உடைத்து பரபரப்பை ஏற்படுத்தியது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வீட்டின் இரும்பு காம்பவுண்ட் கதவை உடைத்து வளாகத்திற்குள் செல்ல முயன்றது. பின்னர் அங்கிருந்த வாழை மரத்தைப் பிடுங்கி சேதப்படுத்தியதுடன், அதன் இலைகளைத் தின்றது.

சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் விழித்ததைத் தொடர்ந்து, யானை அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது. இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us