AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Aadhaar : இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது.. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துவிட்டீர்களா?

Updated Biometric Details For Children Between 5 to 17 | குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்கள் இருக்காது. அது அவர்கள் 7 வயதுக்குள்ளாக செய்ய வேண்டும். இந்த நிலையில், பால் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி என பார்க்கலாம்.

Aadhaar : இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது.. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துவிட்டீர்களா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Aug 2026 11:26 AM IST

இந்திய குடிமக்களுக்கான் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. பல்வேறு தேவைகளுக்காக ஆதார் கார்டு கேட்கப்படும் நிலையில், அதில் உள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. அதற்காக தான் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டில் உள்ள விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification authority Of India) கூறுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்ய இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்

இந்தியாவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைவருக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, பாலினம், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில், இந்த தகவல்கள் அனைத்தும்  எப்போதும் அப்டேட்டடாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

இதையும் படிங்க : Gold Price : ஆகஸ்ட் இறுதிக்குள் ரூ.1.25 லட்சத்தை எட்டும் தங்கம் விலை?.. ஷாக் கொடுக்கும் கணிப்புகள்!

எனவே தான் பொதுமக்கள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், 5 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய கடைசி தேதி இன்னும் ஒரு மாதங்களில் நிறையவடைய உள்ளது.

ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி?

  1. முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் myAadhaar இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு உங்களது ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபியை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
  3. அதில் கொடுக்கப்பட்டுள்ள Address Update என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  4. பிறகு அதற்கு தேவையான அடையாளச் சான்று அல்லது முகவரிச் சான்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன்.. அமைச்சர் விஸ்வநாதன் அசத்தல் அறிவிப்பு!

பால் ஆதார் கார்டுகளில் கைரேகை மற்றும் கருவிழி படலம் உள்ளிட்ட தகவல்கள் இருக்காது. அது 5 வயதான பிறகு தான் எடுக்கப்படும். இதனை 7 வயதுக்குள் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் 5 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை செப்டம்பர் 30, 2026-க்குள் இலவசமாக புதுப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இ சேவை மையங்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்

செப்டம்பர் 30, 2026-க்கு பிறகு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியாது என்பதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இ சேவை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மற்றபடி, முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறைப்படி ஆன்லைன் மூலம் மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us