AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இபிஎஃப்ஓ அமைப்பு வழங்கும் காப்பீடு.. ரூ.7 லட்சம் வரை பெறலாம்.. முழு விவரம்!

EPFO Free Insurance | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனியார் துறை ஊழியர்களுக்கான சிறந்த அமைப்பாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கும் அசத்தல் அம்சத்தையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது. இந்த அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ அமைப்பு வழங்கும் காப்பீடு.. ரூ.7 லட்சம் வரை பெறலாம்.. முழு விவரம்!
Epfo Edli
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Aug 2026 23:42 PM IST

இந்தியாவில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) மூலம் லட்சக்கணக்கான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதாவது, இபிஎஃப்ஓவில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் (PF – Provident Fund) பணம் தான் பெரும்பாலான ஊழியர்களின் முதன்மை சேமிப்பாக உள்ளது. அதுமட்டுமன்றி, இபிஎஃப்ஓவில் இலவச காப்பீடும் கிடைக்கிறது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கிடைக்கும் இலவச காப்பீடு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ அமைச்சகம் வழங்கும் இடிஎல்ஐ

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இடிஎல்ஐ திட்டத்தின் கீழ் இலவச ஆயுள் காப்பீடு வசதி திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சிறந்த திட்டமாக உள்ளது. இந்த காப்பீட்டில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போதே உயிரிழந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கோ அல்லது அவர் நியமனம் செய்துள்ள நாமினிக்கோ காப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த காப்பீட்டில் பலன்களை பெற ஊழியர்கள் பிற காப்பீட்டு திட்டங்களை போல எந்த விதமான பிரீமியமும் செலுத்த தேவையில்லை.

இதையும் படிங்க : அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

கடைசி 12 மாத சம்பளம்  கணக்கிடப்படும்

இந்த இடிஎல்ஐ திட்டத்தில் ஊழியர்களின் கடைசி இரண்டு மாத சம்பளத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஊரியர் பணியில் இருக்கும்போது ஈட்டிய கடைசி 12 மாதங்களுக்கான சம்பளம் மற்றும் அகவிலைப்படி சராசரி ஆகியவை கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி ரூ.15,000 அதிகபட்ச சம்பளமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க : ஆதார் கார்டில் எத்தனை முறை முகவரியை மாற்றம் செய்யலாம்.. UIDAI விதிகள் கூறுவது என்ன?

அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை வழங்கப்படும்

இதனை 30 ஆல் பெருக்க வேண்டும். அதனுடன் 12 மாதங்களில் ஊழியரின் பிஎஃப் கணக்கில் இருந்த சராசரி இருப்பில் 50 சதவீத தொகை, அதாவது அதிகபட்சமாக ரூ.1.75 லட்சம் சேர்க்கப்படும். இவ்வாறு கணக்கிடப்படும் பட்சத்தில் ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us