ஆதார் கார்டில் எத்தனை முறை முகவரியை மாற்றம் செய்யலாம்.. UIDAI விதிகள் கூறுவது என்ன?
How Many Times We Change Name In Aadhaar Card | இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், ஆதாரில் ஒருவர் எத்தனை முறை முகவரியை மாற்றம் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைவருக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, பாலினம், வயது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை ஏதேனும் விவரங்கள் மற்ற ஆவணங்களில் இருக்கும் விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால் சில பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.
இந்த நிலையில், ஆதார் கார்டில் பெயர், முகவரி ஆகிய விவரங்களை மாற்றம் செய்துக்கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) அனுமதி வழங்குகிறது. இந்த நிலையில், எத்தனை முறை ஒருவரின் ஆதாரில் முகவரியை மாற்றம் செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆதார் முகவரி மாற்றம்
முகவரி என்பது சிலருக்கு நிரந்தரமாக இருக்கும், சிலருக்கு நிரந்தரம் இல்லாமல் இருக்கும். குறிப்பாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் நிரந்தர முகவரி இல்லாமல் இருப்பர். இந்த நிலையில் அவர்கள் அடிக்கடி முகவரியை மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை ஒருவர் எத்தனை முறை அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சில விதிமுறைகளை வைத்துள்ளது.




இதையும் படிங்க : சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!
எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிகளின்படி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆதாரில் முகவரியை மாற்றம் செய்துக்கொள்ளலாம். வேலை, படிப்பு உள்ளிட்டவற்றின் காரணமாக அடிக்கடி இடம் மாறும் நபர்கள் சிக்கலை எதிர்க்கொள்ளாமல் இருக்கும் வகையில், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : Gold : தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக இவை குறித்து கவனம் தேவை.. என்ன என்ன தெரியுமா?
இதேபோல ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணையும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றம் செய்துக்கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்குகிறது. வங்கி சேவைகள், அரசு சேவைகளை பெற ஆதார் ஓடிபி கட்டாயமாக உள்ளதால் ஆதாரில் இருக்கும் மொபைல் எண்ணை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டியது கட்டயமாக உள்ளது.