AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold : தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக இவை குறித்து கவனம் தேவை.. என்ன என்ன தெரியுமா?

Tips For Gold Investment | தங்கம் உலக அளவில் சிறந்த முதலீடாக உள்ளது. இந்தியர்கள் மத்தியிலும் முதன்மை முதலீடாக தங்கம் உள்ளது. இந்த நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Aug 2026 12:27 PM IST
உலக அளவில் தங்கம் ஒரு மிக முக்கிய மற்றும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய பொதுமக்கள் மத்தியில் தங்க முதலீடு பரவலாக காணப்படுகிறது. இந்த நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் சில உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக அதற்கான தேவையை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது, குறுகிய கால தேவைக்காக முதலீடு செய்கிறீர்களா அல்லது நீண்ட கால தேவைகளுக்காக முதலீடு செய்கிறீர்களா என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும்.

2 / 5
பலரும் கையில் இருக்கும் மொத்த பணத்தையும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பர். ஆனால், அவ்வாறு செய்வது தேவையற்ற நிதி சிக்கல்களை ஏற்படுத்திவிடும். இந்த நிலையில், உங்கள் கையில் எவ்வளவு பணம் உள்ளது, முதலீடு செய்வதால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிக்கல் ஏதும் ஏற்படாதா என்பதை உறுதி செய்த பிறகு சிறிய தொகை முதலே முதலீடு செய்யலாம். 

3 / 5
தற்போதைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே அவ்வாறு டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அந்த தளம் அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதி செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. குறிப்பாக SEBI போன்ற அமைப்புகள் கண்காணிக்கும் தளங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

4 / 5
தங்கத்தின் விலை நிலவரம் சர்வதேச காரணிகளால் தொடர் மாற்றங்களை சந்தித்துக்கொண்டே இருக்கும். எனவே நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் தொடர்ந்து தங்கத்தின் விலை நிலவரத்தை கவனிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இவ்வாறு கண்காணிப்பது சரியான நேரத்தில் முதலீடு செய்து சிறந்த லாபத்தை பெற உதவும். 

5 / 5
Follow Us