AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ரூ.25 லட்சம் வரை மருத்துவ செலவுகள் இலவசம்.. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் அளவு உயர்வு!

Chief Minister Health Insurance Scheme | தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இனி ரூ.25 லட்சம் வரை மருத்துவ செலவுகள் இலவசம்.. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் அளவு உயர்வு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Aug 2026 18:23 PM IST

தமிழகத்தில் கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் (Tamil Nadu Chief Minister Joseph Vijay) இதில் ஒரு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். அதாவது காப்பீடு அளவை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது குறித்தும், அதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக் பார்க்கலாம்.

இனி ரூ.25 லட்சம் வரை மருத்துவ செலவுகள் இலவசம்

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது தான் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம். அதன் பின் ஆட்சி பொறுப்பேற்ற அதிமுகவும் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியது. ரேஷன் அட்டை (Ration Card) அடிப்படையில் தான் இந்த திட்டத்திற்கு பயனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவ காப்பீடு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உயர்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : தொடர் விலை உயர்வு.. ரூ.1.60 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. காரணம் என்ன?

உயர் சிகிக்சைகளை காப்பீடு மூலம் செய்துக்கொள்ளலாம்

காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, உயர் சிகிச்சைகளை மிக எளிதாக பெற முடியும். இந்த முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் பயன்பெற அந்த குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கும் குறைவானதாக இருக்க வேண்டும். இந்த நிலையில், தகுதியுள்ளவர்கள் கிராம் நிர்வாக அலுவலரிடம் இருந்து வருமான சான்றிதழை பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிரத்யேக மையத்திற்கு சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us