தொடர் விலை உயர்வு.. ரூ.1.60 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. காரணம் என்ன?
Gold Price Increasing Continuously For 6th Day | ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று 6வது நாளாக அதிரடி விலை உயர்வை சந்தித்த தங்கம் ரூ.1,60,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை (Gold Price) தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக இன்று தொடர்ந்து 6வது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. தங்கம் இத்தகைய தொடர் விலை உயர்வை சந்தித்து வருவதன் காரணமாக ஒரு சவரன் 24 காரட் தங்கம் ரூ.1.60 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் இவ்வாறு தொடர் விலை உயர்வை சந்தித்து செல்வதன் காரணமாக நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி தொடர் விலை உயர்வை சந்தித்து வருவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் விலை உயர்வை சந்தித்து வரும் தங்கம், வெள்ளி
மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை தங்கம் விலை பெரிய அளவிலான மாற்றங்களை சந்திக்காமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக ஜுன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஒரு கிராம் ரூ.13,000-க்கு விற்பனையானது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், ஆகஸ்ட் மாதத்தில் அதிரடி விலை உயர்வை சந்தித்தது வருகிறது.
இதையும் படிங்க : இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் – ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிவிப்பு




அதிரடி விலை உயர்வை சந்தித்த தங்கம், வெள்ளி
சென்னயில் இன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,710-க்கும், 10 கிராம் ரூ.1,41,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,047-க்கும், 10 கிராம் ரூ.1,60,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கலாம்?.. விதிகள் கூறுவது என்ன?
2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க வங்கி வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிதமான அளவில் இருந்தது. ஆனால், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையேயான சிக்கல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவது உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி மீண்டும் விலை உயர்வை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.