AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கலாம்?.. விதிகள் கூறுவது என்ன?

How Many Credit Cards Can A Person Have | தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது பண தேவைகளுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம், விதிகள் கூறுவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Aug 2026 11:55 AM IST
தற்போதைய சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பண தேவைகளுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். முன்கூட்டியே பணத்தை செலவு செய்துவிட்டு, பிறகு கடன் தொகையை திருப்பி செலுத்த வாய்ப்பு வாய்ப்பு வழங்கப்படுவதன் காரணமாக பலரும் கிரெடிட் கார்டு பயப்படுத்துகின்றனர். 

1 / 5
இந்த நிலையில், ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கலாம், ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு வைத்திருந்தால் என்ன என்ன சிக்கல் ஏற்படும், அது குறித்து வங்கி விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து ஒவ்வொரு கிரெடிட் கார்டு பயனர்களும் தெரிந்துக்கொள்வது கட்டாயமாக உள்ளது. 

2 / 5
ஒருவர் இத்தனை கிரெடிட் கார்டு தான் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு வங்கியோ அல்லது சிபில் அமைப்புகளோ எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. ஒருவர் தனது செலவு மற்றும் நிதி தேவையை வைத்து எத்தனை கிரெடிட் கார்டுகளை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

3 / 5
கிரெடிட் கார்டுக்கு பிற கடன்களை காட்டிலும் சற்று அதிகம். இதற்கு ஒவ்வொரு வங்கிகளை பொறுத்து 32 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை வருடாந்திர வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. எனவே ஒருவர் ஒரே ஒரு கிரெடிட் கார்டை மட்டும் பயன்படுத்துவது போதுமானதாகவும், சிக்கல் இல்லாமலும் இருக்க உதவும்.

4 / 5
எனவே கிரெடிட் கார்டு பயன்படுத்த விரும்பும் நபர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் கிடைக்ககூடிய கிரெடிட் கார்டை தேர்வு செய்துக்கொள்ளலாம். ஒரு கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது பில் செலுத்த வேண்டிய தேதியை எளிதாக நினைவில் கொள்ள முடியும். இதன் மூலம் எந்த வித சிக்கலும் இல்லாமல் மாத தவணை செலுத்தலாம்.

5 / 5
Follow Us