கேஸ் சிலிண்டர் KYC கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி விவரம்.. உடனே இதை பண்ணுங்க.!
Gas Cylinder eKYC Last Date Extended | எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சி மேற்கொள்ள கடைசி தேதி ஆகஸ்ட் 23, 2026 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை (LPG Gas Cylinders) தொடர்ந்து பெற இகேஒய்சி (eKYC – Know Your Customer) கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இகேஒய்சி முடிக்க ஆகஸ்ட் 15, 2026 தான் கடைசி தேதி என கூறப்பட்ட நிலையில், தற்போது தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் இகேஒய்சி முடிக்க எவ்வளவு நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சி கட்டாயம்
ஈரான் போரின்போது, இந்தியா மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடை எதிர்க்கொண்டது. இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் தான் கேஸ் சிலிண்டர்களுக்கான இகேஒய்சி முறையை கட்டாயப்படுத்தியது.
இதையும் படிங்க : இஎம்ஐ செலுத்தத் தவறினால் வங்கி உங்கள் வீட்டை ஜப்தி செய்ய முடியுமா? உண்மை என்ன?




பின்னர், கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் ஆகஸ்ட் 15, 2026-க்குள் அவற்றுக்கான இகேஒய்சியை முடிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, கேஸ் சிலிண்டர்களுக்கான இகேஒய்சி காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சி மேற்கொள்ள கடைசி தேதி ஆகஸ்ட் 23, 2026 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் – ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்
கேஸ் சிலிண்டர் இகேஒய்சி மேற்கொள்வது எப்படி?
- நீங்கள் எந்த நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகிறீர்களோ அதன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அதேபோல Aadhaar FaceRD செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
- முகப்பு பக்கத்தில் உள்ள LPG e-KYC என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை படித்துவிட்டு, ஒப்புதல் அளித்து, முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.
- முகம் ஸ்கேன் வெற்றிகரமாக முடிந்ததும், e-KYC விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி வீட்டில் இருந்தே மிக சுலபமாக கேஸ் சிலிண்டர்களுக்கான இகேஒய்சியை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.