இன்று தான் கடைசி தேதி.. இகேஒய்சி செய்யவில்லை என்றால் நாளை முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!
Complete eKYC To Get Gas Cylinders | இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 15, 2026) கேஸ் சிலிண்டருக்கான இகேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.
இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் தங்களது சமையல் தேவைக்கு, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை (LPG Gas Cylinders) பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு சிலிண்டர் கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது. அதாவது, கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள அனைவரும், இன்று (ஆகஸ்ட் 15, 2026) தங்களது கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான இகேஒய்சியை (KYC – Know Your Customer) மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்களால் நாளை (ஆகஸ்ட் 16, 2026) முதல் கேஸ் சிலிண்டர் பெற முடியாது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் கேஒய்சி மேற்கொள்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேஸ் இணைப்புகளுக்கு இகேஒய்சி கட்டாயம்
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளிட்டவற்றின் மூலம் இந்திய பொதுமக்கள் மத்தியில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு பரவலாக அதிகரித்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் தங்களது சமையல் தேவைகளுக்கு கேஸ் சிலிண்டர்களை தான் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஈரான் போரின் போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக இந்தியா மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்டது.
இதையும் படிங்க : Gold Price : 10 நாட்களில் ரூ.5,000 வரை உயர்ந்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இது சரியான நேரமா?




இந்த நிலையில் தான் அனைத்து குடும்பங்களுக்கு எந்தவித சிக்கல்களும் இன்றி கேஸ் சிலிண்டர்கள் சென்று சேறுவதை உறுதி செய்யும் விதமாக அரசு சில முக்கிய விதிகளை அறிமுகம் செய்தது. குறிப்பாக கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் நபர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை நிர்ணயம் செய்தது.
கேஸ் சிலிண்டர் இகேஒய்சி மேற்கொள்வது எப்படி?
இந்த நிலையில் தான் கேஸ் சிலிண்டர்களுக்கு இகேஒய்சியை கட்டாயமாக மாற்றியது. இன்றுடன் அதற்கான கால அவகாசம் நிறைவடையும் நிலையில், நாளை முதல் இகேஒய்சி மேற்கொள்ளாதவர்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது.
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் Aadhaar FaceRD செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிறகு நீங்கள் எந்த நிறுவனத்தின் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அந்த நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அதில் உங்களது நுகர்வோர் எண் அல்லது கேஸ் இணைப்புக்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
- செயலிக்குள் சென்று அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் Re-eKYC அல்லது Aadhaar e-KYC என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
- அங்கு உங்களது ஆதார் எண்ணை உள்ளிட்டு, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை ஏற்று Face Scan என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது Aadhaar FaceRD கேமரா திரையில் தோன்றும். அதனை பயன்படுத்தி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.
- ஸ்கேன் முடிந்ததும், உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். கடைசியாக Submit பட்டனை அழுத்தி உங்களது இகேஒய்சியை முடிக்க வேண்டும்.