லோன் வாங்கி கார் வாங்க போறீங்களா?.. இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
Mistakes To Avoid In Car Loan | பெரும்பாலான மக்கள் லோன் வாங்கியாவது கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கார் வாங்குகின்றனர். அப்போது அவர்கள் இந்த சில விஷயங்களை கவனத்தில் கொள்வதில்லை. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் காரும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக வங்கிகளில் கார் லோன் (Car Loan) பெற்று, மாத தவணை முறையில் (EMI – Every Month Installment) பலரும் கார் வாங்குகின்றனர். இதேபோல, வங்கிகளும் பொதுமக்களுக்கு கார் கடன்களை வழங்கி வருகின்றனர். ஆனால், அவ்வாறு வங்கியில் கடன் பெற்று கார் வாங்கும்போது இந்த விஷயங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுவது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கார் லோன் – செய்யவே கூடாத முக்கிய விஷயங்கள்
லோன் வாங்கி கார் வாங்கும்போது இந்த சில தவறுகளை செய்வதன் மூலம் பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே, இவற்றை குறித்து தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
மாத தவணை தொகையை மட்டும் பார்ப்பது
பெரும்பாலான நபர்கள் மாத தவணை தொகை குறைவாக இருக்கிறது என கார் லோன் வாங்கி விடுகின்றனர். ஆனால், அது அப்படி அல்ல. மாத தவணை குறைவாக இருந்தால், எத்தனை ஆண்டுகளுக்கு மாத தவணை செலுத்த வேண்டும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். ஒருவேளை அதிக ஆண்டுகள் மாத தவணை செலுத்த வேண்டிய சூழல் இருந்தால், குறைந்த மாத தவணையுடன் சேர்த்து அதிக வட்டி செலுத்த வேண்டும்.




இதையும் படிங்க : இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!
முதல் லோன் ஆஃபர்
பெரும்பாலான நபர்கள் கார் வாங்கும் ஆர்வத்தில் தங்களுக்கு கிடைக்கும் முதல் லோன் ஆஃபரிலேயே கார் லோன் வாங்கிவிடுகின்றனர். அப்படி செய்யாமல், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து எது சிறப்பாக உள்ளது என தேர்வு செய்து கடன் பெற வேண்டும்.
இதையும் படிங்க : பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய விதிகள்.. மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!
குறைந்த முன்பணம் செலுத்துவது
பெரும்பாலான நபர்கள் குறைந்த அளவு முன்பணம் செலுத்தி கார் வாங்கிக்கொண்டு, பிறகு மாத தவணை முறையில் பணத்தை திருப்பி செலுத்தலாம் என நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி இல்லை. குறைந்த முன்பணம் செலுத்தும் பட்சத்தில் அதிக வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, கார் வாங்கும்போது அதிக முன்பணம் செலுத்துவது அதிக வட்டி உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும்.