Gold : இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.14,000-த்தை தாண்டிய தங்கம்.. காரணம் என்ன?
Gold Price Crossed 14000 Rupees After Two Months | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ரூ.14,000-த்தை தாண்டியுள்ளது. அது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.
தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு மாதம் கடும் சரிவை சந்திக்கும் தங்கம் அடுத்த மாதம் தொடர் உயர்வை சந்திக்கிறது. இல்லையென்றால் பெரிய விலையேற்றம் எதுவும் இல்லாமல், ஒரே விலையிலே நீடித்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஜூன் மாதத்தில் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் ஒரே அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது.
அதன்படி, ஜூலை மாதம் முதல் ரூ.13,000-த்தில் நீடித்து வந்த தங்கம், தற்போது ரூ.14,000-த்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், தங்கம் திடீர் விலை உயர்வை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மீண்டும் ரூ.14,000-த்தை தாண்டிய தங்கம் விலை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 02 ஆகஸ்ட் 2026 | ரூ.13,220 | ரூ.1,05,760 |
| 03 ஆகஸ்ட் 2026 | ரூ.13,250 | ரூ.1,06,000 |
| 04 ஆகஸ்ட் 2026 | ரூ.13,200 | ரூ.1,05,600 |
| 05 ஆகஸ்ட் 2026 | ரூ.13,480 | ரூ.1,07,840 |
| 06 ஆகஸ்ட் 2026 | ரூ.13,750 | ரூ.1,10,000 |
| 07 ஆகஸ்ட் 2026 | ரூ.13,900 | ரூ.1,11,200 |
| 08 ஆகஸ்ட் 2026 | ரூ.13,965 | ரூ.1,11,720 |
| 09 ஆகஸ்ட் 2026 | ரூ.13,965 | ரூ.1,11,720 |
| 10 ஆகஸ்ட் 2026 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
| 11 ஆகஸ்ட் 2026 | ரூ.14,250 | ரூ.1,14,000 |
இதையும் படிங்க : மாதம் ரூ.9,250 வருமானம்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம்!
தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
ஈரான் போரால் ஏற்பட்ட புவிசார் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை சற்று சரிவை சந்தித்தது. ஆனால், தற்போது ஈரான் போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இதுதவிர அமெரிக்க மத்திய வங்கியும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தபோவதில்லை என தகவல் வெளியாகி வருகிறது. இவற்றின் காரணமாக உலக முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க : இந்த விஷயங்களுக்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் பிடிக்க முடியாது.. முழு விவரம்!
இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தங்கம் விலை ரூ.14,000-த்தை தாண்டியுள்ளது.



