KYC-ஐ முடிக்காவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது – எப்படி செய்வது?
எல்பிஜி வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16, 2026 அன்றுக்குள் தங்கள் e-KYC பணிகளை முடிக்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் KYC செயல்முறையை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறை மிகவும் எளிமையானது. இதை ஆன்லைனில் எப்படி முடிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நீங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர் என்றால், இந்த முக்கியத் தகவலைக் கவனத்தில் கொள்ளுங்கள். எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் தடையற்ற விநியோகம் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு e-KYC செயல்முறையை முடிப்பது அவசியம். எல்பிஜி வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16, 2026 e-KYC-ஐ முடிப்பது கட்டாயமாகும். இச்செயல்முறையை முடிக்கத் தவறினால், எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் மற்றும் மானியங்கள் நிறுத்தப்படலாம். e-KYC செயல்முறையை முடிப்பது எளிது; இதை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் (நேரடியாகச் சென்று) மூலமாகவும் செய்யலாம்.
நாடு முழுவதும் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் விவரங்களைப் புதுப்பிக்கவும், கள்ளச்சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் e-KYC முகாம் நடத்தப்பட்டு வருகிறது. எல்பிஜி ஏஜென்சிகள் நிலையங்கள் தொலைபேசி அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்துத் தெரிவித்து வருகின்றன. வாடிக்கையாளர்களுக்குச் சேவையில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யவே இச்செயல்முறை செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 16, 2026 என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள் e-KYC-ஐ முடிக்கத் தவறினால் சிக்கல்கள் ஏற்படலாம்.
இதையும் படிக்க : EPFO : 2 ஆண்டுகள் கரியர் கேப் ஏற்பட்டால் பிஎஃப் கணக்கு என்னவாகும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!




எவ்வாறு அப்டேட் செய்வது?
உங்கள் ஆதார் அட்டை மற்றும் எரிவாயு இணைப்புப் புத்தகத்துடன் கேஸ் ஏஜென்சி நிலையத்திற்குச் செல்லவும். அங்குள்ள ஊழியர் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களைச் சரிபார்ப்பார். பயோமெட்ரிக் ஸ்கேன் மூலம் e-KYC செயல்முறை முடிக்கப்பட்டு, உங்கள் தரவுகள் புதுப்பிக்கப்படும்.
ஆன்லைனில் எப்படி செய்வது?
இந்தச் செயல்முறைக்குச் சிக்கலான முயற்சிகள் எதுவும் தேவையில்லை. ஸ்மார்ட்போன் மூலம் வீட்டிலிருந்தே e-KYC-ஐ ஆன்லைனில் முடிக்கலாம். கேஸ் ஏஜென்சி நிலையத்திற்குச் சென்று வரிசையில் நிற்பதைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் வீட்டிலிருந்தே இந்தச் செயல்முறையை முடிக்கலாம்.
இதையும் படிக்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!
- முதலில், இண்டேன், பாரத் கேஸ், அல்லது எச்பி கேஸ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பார்வையிடவும்.
- உங்கள் கணக்கில் லாகின் செய்து உள்நுழைந்து, ‘eKYC’ அல்லது ‘KYC Update’ என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் எல்பிஜி நுகர்வோர் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
- அடுத்து, OTP சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும்.
- உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த OTP-ஐ உள்ளிடவும்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் கார்டு
- எரிவாயு இணைப்புப் புத்தகப் புத்தகம் அல்லது எல்பிஜி (LPG) நுகர்வோர் எண்
- ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்
- பிற அடையாளச் சான்று