Gold Price : அதிரடியாக சரிந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold and Silver Price Reduced In Chennai | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 மற்றும், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 22 : சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 22, 2026) இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை (Silver Price) கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு தங்கம் கொண்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாகவே, இந்த தொடர் ஏற்ற, இறக்கங்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக தங்கம் ஒரு கிராம் ரூ.15,000-த்தை தாண்டாமலும், ரூ.14,000-க்கு கீழ் செல்லாமலும் நீடித்து வருகிறது.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டில் 30% விதி என்றால் என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை
தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 22, 2026) இரண்டாவது நாளாக கடும் சரிவை சந்தித்துள்ளது. இதேபோல மூன்று நாட்களுக்கு பிறகு வெள்ளி விலையும் சரிந்துள்ளது. இவ்வாறு நிலையற்ற தன்மையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க : இனி பெட்ரோல் பங்கில் UPI இல்லையா?.. எம்டிஆர் ஏற்படுத்தும் நெருக்கடி.. முழு விவரம் இதோ!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,185-க்கும், சவரனுக்கு ரூ.680 ஒரு சவரன் ரூ.1,13,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,475-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.