சக போட்டியாளர்களை செய்கையால் கடுப்பேத்திய முனியம்மாள் – கடுப்பான லட்சுமி பிரியா – வைரலாகும் புரோமோ!
Muniyamma vs Lakshmi Priya: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கிய கிட்டத்தட்ட 3வது வாரமான நிலையில், மக்கள் மத்தியி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. முனியம்மாள் சக போட்டியாளர்களை அவ்வப்போது கடுப்பேத்திவரும் நிலையில், இன்று வெளியான புரோமோவில் லட்சுமி பிரியா, அவரை வெளுத்துவங்கியுள்ளார்.
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், இதுவரை மொத்தம் 2 வாரங்களாக போட்டியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பிவருகிறார். அந்த விதத்தில் கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் முனியம்மாளால் பல்வேறு பிரச்சனைகள் இருந்துவருகிறது. தனது வார்த்தைகளால் முனியம்மாளை சக போட்டியாளர்களை காயப்படுத்திவரும் நிலையில், அதை பலரும் விமர்சித்துவருகிறார்கள். டைனிங் டீமிலிருந்த முனியம்மாளால், அந்த அணியின் கேப்டன் ராகவ் நன்றாக வேலை செய்யவில்லை என இந்த வாரத்தின் ஏவிக்ஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார்.
இதிலிருந்து இவர் மீது போட்டியாளர்கள் கோபத்தில் இருந்த நிலையில், இன்று (22/09/2026) வெளியான புரோமோவில் லட்சுமி பிரியாவிடம் தனது வார்த்தைகள் மற்றும் செய்கைகளால் முனியம்மாள் கடுப்பேத்தியுள்ளார். இதஹனால் அவருடன் இருந்த சக போட்டியாளர்களும் முனியம்மாளை எதிர்த்து பேசியுள்ளனர்.




இதையும் படிங்க: 22 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் இணைகிறதா சூர்யா மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணி?
லட்சுமி பிரியாவிடம் செய்கைகளால் கடுப்பேத்திய முனியம்மாள்:
அந்த புரோமோவில் ராகவ் மற்றும் லட்சுமி பிரியா இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், அதன் நடுவே புகுந்து முனியம்மாள் தனது சில்மிஷத்தை காட்டியுள்ளார். இந்நிலையில் உடனே கடுப்பான லட்சுமி பிரியா முனியம்மாவை தாக்கி பேச தொடங்கினார். முனியம்மாளும் தனது செய்கை மற்றும் வக்கணையால் லட்சுமி பிரியாவை கடுப்பேற்றியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 37 கலைஞர்களின்.. கின்னஸ் சாதனை படைத்த ராக்கா படக்குழு!
உடனே சாதிகா மற்றும் மற்ற போட்டியாளர்களும் முனியம்மாவை தாக்கி பேச தொடங்கியுள்ளனர். அந்த விதத்தில் இன்றிய தொடரில் முனியம்மாளால் பெரிய சம்பவம் ஒன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சுமி பிரியா மற்றும் முனியம்மாள் சண்டை குறித்து வைரலாகும் புரோமோ வீடியோ;
#Day16 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/Zr1L475ldT
— Vijay Television (@vijaytelevision) September 22, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மொத்தம் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் லட்சுமி பிரியா, தன்யா, ராகவ் மற்றும் ஆனந்தி போன்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அந்த விதத்தில் இந்த 4 நபர்களில் யார் இந்த வாரத்தில் வெளியேறுவரை என்று இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. மற்றொருபுறம் 3வது வாரத்தில் ஏவிக்ஷன் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.