AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக் பாஸில் இந்தவார நாமினேஷன்.. கதறி அழுத்த ஆனந்தி – வைரலாகும் புரோமோ!

Bigg Boss Tamil 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் நாமினேஷனில் யாரெல்லாம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என பார்க்கலாம். அது குறித்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸில் இந்தவார நாமினேஷன்.. கதறி அழுத்த ஆனந்தி – வைரலாகும் புரோமோ!
பிக் பாஸ் தமிழ் 10 நாமினேஷன்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 21 Sep 2026 20:01 PM IST

தென்னிந்திய மொழிகளில் ஒரே நாளில் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கியிருந்தது. தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளாராக தொகுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 2 வாரங்களை கடந்த நிலையில், இதுவரை மொத்தமாக 3 நபர்கள் வெளியேறியுள்ளனர். அதில் கடந்த வாரத்தில் மட்டுமே ஜாவித் மற்றும் மணிவண்ணன் என இருவர் வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியானது தமிழில் சிறப்பாகவே மற்றும் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

அந்த விதத்தில் கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) போட்டியாளர்களை சந்தித்த நிலையில், ஆனந்த், சாதிகா போன்ற போட்டியாளர்களை வெளுத்து வாங்கியிருந்தார் . இந்நிலையில் 3வது வாரத்தில் நாமினேஷனில் எந்தெந்த போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அது யாரென பார்க்கலாம்.

இதையும் படிங்க: ராஜூ ஜெயமோகன் இயக்கத்தில் உருவாகும் ஆல்மோஸ்ட் நல்லவன் – இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

இந்த வராத்தில் பிக் பாஸ் சீசன் 10ல் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள்:

கடந்த வாரத்தில் நாமினேஷனில் ஜாவித் மற்றும் மணிவண்ணன் போன்ற இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் எந்தெந்த போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என பார்க்கலாம். இந்த வாரத்தில் நாமினேஷனில் ஆனந்தி மற்றும் லட்சுமி பிரியா என மூவரும் அதிக நபர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அந்த விதத்தில் இந்த மூவரில் யார் வெளியேறுவார் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த வாரத்தில் நாமினேஷன் இல்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆளுமையில் இருக்கும் குக்கிங் கேப்டனை அடிக்கவேண்டும்.. மாஸ்டர் பிளான் போட்ட சாத்விகா – லட்சுமி பிரியா!

இந்த வாரத்தின் நாமினேஷன் குறித்து வெளியான பிக் பாஸ் புரோமோ:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 3 வது வாரத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த வாரத்திலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக போட்டியாளர்கள் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us