22 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் இணைகிறதா சூர்யா மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணி?
Suriya and Mani Ratnam Reunite: தென்னிந்திய சினிமாவில் தற்போது மக்கள் கொண்டாடவும் நடிகர்களில் ஒருவராக சூர்யா. இவரின் நடிப்பில் புது புது படங்கள் உருவாகிவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டிலே மொத்தம் 3 படங்கள் .வெளியாகிறது. அந்த விதத்தில் தற்போது மணி ரத்தினத்துடன் சூர்யா புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா (Suriya) தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் நெருக்கமான இருக்கும் நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் .உருவாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் இந்த படமானது வெளியான நிலையில், இதன் பிறகு இயக்குநர் ஜித்து மாதவனின் (Jithu Madhavan) இயக்கத்தில் சீன் (Scene) என்ற படத்தில் .இணைந்தார். இப்படமானது ஆரம்பத்தில் சூர்யா47 அழைக்கப்பட்டுவந்தது. இந்த படத்தில் சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்திருந்தனர். இப்படம் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் தனது 48வது படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படமானது உண்மையான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். மேலும் தற்போது இப்படத்திற்கும் அடுத்தடுத்த படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். அந்த விதத்தில் இவர் மணிரத்தினம் (Mani ratnam) இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளாராம்.




இதையும் படிங்க: ராஜூ ஜெயமோகன் இயக்கத்தில் உருவாகும் ஆல்மோஸ்ட் நல்லவன் – இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
மீண்டும் இணையும் சூர்யா – மணி ரத்தினம் காம்போ :
சூர்யா தமிழ் சினிமாவில் பல படங்களில் நயாகனாக நடித்து அசத்தியிருக்கிறார். அந்த விதத்தில் இவர் மணிரத்தினத்தின் நாயகனாக நடித்துள்ளார். இவர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் இவர் புது படத்தில் இணைகிறாராம். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு, மணிரத்னம் சூர்யாவிடம் ஒரு கதையை விவரித்தார், ஆனால் அந்த நேரத்தில் அந்தத் திட்டம் கைகூடவில்லை.
இதையும் படிங்க: மண்டாடி வகையரா.. சூரியின் முதல் ரூ 100 கோடி வசூல்.. வெற்றி மிதப்பில் மண்டாடி படக்குழு!
இப்போது, அதே கதையை மீண்டும் சூர்யாவிடம் விவரிப்பது குறித்து மணிரத்னம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்பத்தின் கதை இஞ்சி வெல்லம் படத்திற்கு பின் இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்தினம் மற்றும் சூர்யாவின் கூட்டணி குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:
After #AayuthaEzhuthu, #ManiRatnam & #Suriya are likely to reunite 🔥
Around 8 years ago, Mani Ratnam had narrated a story to Suriya, but the project didn’t materialise at the time. Now, Mani Ratnam is reportedly considering whether to revisit and narrate the same story to… pic.twitter.com/GIpDj6IcAb
— Movie Tamil (@_MovieTamil) September 21, 2026
சூர்யா தற்போது ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைந்து நடித்துவருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிந்த நிலையில், இன்னும் விரைவில் முழுக்க நிறைவடையும். இதன் பிறகே சூர்யா தனது அடுத்த படங்களில் இணைவார் குறிப்பிடத்தக்கது.