AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Mandaadi: மண்டாடி வகையரா.. சூரியின் முதல் ரூ 100 கோடி வசூல்.. வெற்றி மிதப்பில் மண்டாடி படக்குழு!

Mandaadi Movie Collection: தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக இருந்துவருபவர் சூரி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் மண்டாடி. இந்த படமானது சிறப்பாக திரையரங்குகளில் வரவேற்பை பெற்றுவரும் நிலையில்,மொத்தமாக ரூ 100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

Mandaadi: மண்டாடி வகையரா.. சூரியின் முதல் ரூ 100 கோடி வசூல்.. வெற்றி மிதப்பில் மண்டாடி படக்குழு!
மண்டாடிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Sep 2026 15:24 PM IST

கோலிவுட் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சூரி (Soori). இவரின் நடிப்பில் தமிழ் மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து, விஜய் (Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு நட்சத்திர நடிகைகளுடன் இணைந்து சூரி பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் தற்போது இவர் சினிமாவில் ஹீரோவாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் மண்டாடி. இதை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran pugazhendhi) இயக்க, ஆர்.எஸ்.இன்போடேன்மெண்ட் நிறுவனமானது தயாரித்துள்ளது.

இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் கப்பல் போட்டி கதைக்களத்தில் இருக்கும் நிலையில், திரையரங்குகளில் சிறப்பாக வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 11 நாட்களை கடந்த நிலையில், இதுவரை மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் நியூ லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது

சூரியின் மண்டாடி திரைப்படத்தின் மொத்த வசூல்:

சூரியின் இந்த மண்டாடி திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. நடிகர் சூரி இதுவரைக்கும் நகைச்சுவை மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் நடித்திருந்த நிலையில், இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மைசா படத்திற்காக எனது வாழ்க்கையையே கொடுத்தேன் – ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!

இப்படமானது கப்பல் போட்டி மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட நிலையில், கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் வெளியானது. இந்நிலையில் இன்றுடன் (21/09/2026) மொத்தமாக ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சூரியின் மண்டாடி திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:

இந்த மண்டாடி படமானது திரையரங்குகளில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இதில் சூரி ஆக்ஷன் நாயகனாக நடிக்க, மஹிமா நம்பியார், சுஹாஸ் மற்றும் மிதுன் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இப்படம் ஒடிடியிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us