AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகர் சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது புது போஸ்டர்!

Suriyas Secene Movie New Poster | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 47-வது படமாக உருவாகி உள்ளது சீன். இந்தப் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது புது போஸ்டர்!
சீன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Sep 2026 11:34 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வரிசையாக வெளியானது. மேலும் இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படங்கம் இரண்டுமே 250 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன்.

இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கிய இந்தப் படம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான 47-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீன் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது புது போஸ்டர்:

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கும் முன்பு சீன் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் படம் வருகின்ற நவம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வெளியாக 47 நாட்கள் உள்ள நிலையில் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பழம்பெரும் நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார் – சோகத்தில் குடும்பத்தினர்

சீன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நீங்க பன்னது அக்ரசிவ் இல்லையா? ஆனந்தியை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

Follow Us